பிரபல நடிகையுடன் திருமணத்தை அறிவிக்கப் போகும் விஷால்...எப்போது தெரியுமா ?
நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா ஆகிய இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன

விஷால்
செல்லமே படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஷால். ரொமான்ஸ் , ஆக்ஷன் காட்சிகளில் விஷாலின் எனர்ஜி பல ரசிகர்களை குறிப்பாக பெண்களை அதிகம் கவர்ந்தது. திமிரு , சண்டைக்கோழி , தாமிரபரணி என அடுத்தடுத்த வெற்றிகளைக் கொடுத்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். இன்னொரு பக்கம் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் நடிகர் சங்க கட்டிட பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இப்படியான நிலையில் நடிகர் விஷாலும் பிரபல நடிகை சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாய் தன்ஷிகா மற்றும் விஷால் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்க கட்டிட திறப்பிற்கு பின் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது .
சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகிடா திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது திருமணத்தை அறிவிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளை காதலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாண்டியநாடு , நான் சிகப்பு மனிதன் படத்தில் நடி லக்ஷ்மி மேனன் மற்றும் விஷால் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. பின் விஷால் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் காதலித்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷை விஷால் வீட்டு சார்பாக பெண் பார்க்கவும் சென்றார்கள். கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி பருவ நண்பரை காதலித்து வந்ததால் இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.
சாய் தன்ஷிகா
ரவி மோகன் நடித்த பேராண்மை படத்தின் மூலம் பிரபலமானவர் சாய் தன்ஷிகா , பரதேசி , அரவான் , கபாலி ஆகிய படன்களில் இவரது கதாபாத்திரங்கள் கவனமீர்த்தன. தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னட ஆகிய நான்கு மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வென்றார்.





















