Vishal: விருதுக்கு செலக்ட் பண்றவங்க எல்லாம் மேதாவிகளா? விஷால் ஆவேசம்
விருதுகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், விருதுகளுக்கு தேர்வு செய்பவர்கள் ஜுரிகள் எல்லாம் மேதாவிகளா? என்று விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படம் மூலம் அறிமுகமான இவர் சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், துப்பறிவாளன் என பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அர்ஜுன்தான் அனுப்பினாரு:
நடிகர், தயாரிப்பாளர் என பல திறன் கொண்டவராக திகழும் விஷால் சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அதன் ட்ரெயிலரை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்ரெயிலரில் அவர் பேசியதாவது,
12ம் வகுப்பில் ஒரே ஒரு படம் பார்த்தேன். அந்த படம் பார்த்து வெளியில் வந்த பிறகுதான் நான் இயக்குனராகனும்னு சொன்னேன். அர்ஜுன்சார் கிளாப் போர்ட் கீழே வச்சுட்டு நடினு சொன்னார். சரினு நடிச்சேன். 10 நாட்கள் கழிச்சு எடிட்டிங் ரூம்ல காட்டுனார். போடா போய் போட்டோஷுட் பண்ணி ஹீரோ ஆகுற வழியைப் பாருடானு சொன்னாரு.
உறுப்பினராக கூறிய ராதாரவி:
மதுரைப் போகும்போது ஏர்போர்ட்ல ராதாரவி அண்ணன் டேய் விஷால் மெம்பரா இருக்கியாடா?னு கேட்டாரு. இல்லண்ணேனு சொன்னேன். முதல்ல மெம்பர் ஆகுடானு சொன்னாரு. இப்போ யோசிச்சு பாருங்க. இத்தனை வருஷம் கழிச்சு அவரையே எதிர்த்து அவரையே தோக்கடிச்சு அவர் சீட்டுலயே உக்காந்து இருக்கேன்.
Yours Frankly Vishal - No Scripts , No Filter #Unscripted #Unfiltered #Podcast #YousFranklyVishal pic.twitter.com/mQl7bE0Ro7
— Vishal (@VishalKOfficial) October 17, 2025
ஆய்த எழுத்து ஆடிஷன் போயிருந்தேன். நான் கேமரா முன்னாடி ப்ளாங்க். என்னென்னமோ முயற்சி பண்ணேன். இப்படி பாத்த சுதா இப்படி இருக்கு. மிலன் இப்படி இருக்காரு. ( அதிருப்தி சைகையை செய்து காட்டி) நான் சரி ரைட்டு, நம்மளே கிளம்பிடலாம் கெளரவமா அப்படினு கிளம்பிட்டேன்.
விஜய்க்காக பண்ணிய சண்டைகோழி:
லிங்குசாமி ஒரு கதை பண்ணிருந்தாரு விஜய்க்காக. நான் இந்த மாதிரி கேள்விபட்டேன். வண்டியை எடுத்துட்டு போனேன். நேரா அவங்க ஆஃபீஸ்க்கு. இன்னைக்கு வரைக்கும் நான் டூப் பாத்தது இல்லை. 190 ஸ்டிச்சஸ் என் பாடில இருக்குது. எவ்ளோ கோடி கொடுத்தாலும் நான் மாறுகண் வச்சு எல்லாம் மட்டும் போட்டு நடிக்க மாட்டேன்.
அது ஒரு மென்டல் மாதிரி. பாலா சார் ஒருத்தருக்காக. அவரு குதினு சொன்னா கூட குதிச்சுருப்பேன். அவரு என்ன சொன்னாலும் பண்ணேன். இதுதான் என் கடைசி படம்னு நினைச்சேன். வாழ்க்கையை முடிஞ்சுனு நினைச்சேன். அந்தளவுக்கு வலி.
விருதுகளை நம்பமாட்டேன்:
நான் விருதுகளை எல்லாம் நம்ப மாட்டேன். விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம். என்ன 4 பேரு உக்காந்துகிட்டு 7 கோடி மக்களுக்கு என்ன படம், என்ன பிடிச்ச நடிகர்? என்ன பிடிச்ச துணை நடிகர்னு? சொல்ற 4 பேரு என்ன மேதாவிகளா? என்று பேசியுள்ளார். இந்த முழு வீடியோவும் நாளை ஒளிபரப்பாக உள்ளது.
விஷால் தற்போது துப்பறிவாளன் படத்தின் பணிகளில் இருந்து வருகிறார். மேலும், மகுடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரவி அரசு இயக்கி வருகிறார். இந்த படத்தை விஷாலே இயக்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இந்த படத்தை தானே இயக்க உள்ளதாக இயக்குனர் ரவி அரசு விளக்கம் அளித்தார்.






















