47 வயதில்... 35 வயது நடிகை காதலிக்கும் விஷால்... யார் அவர்? இன்று மாலை காத்திருக்கும் சர்பிரைஸ்!
நடிகர் விஷாலுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், மணப்பெண் ஒரு நடிகை என கூறப்படும் நிலையில் அவர் யார் என்கிற தகவல் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நீண்ட நாட்களுக்கு பிறகு 'மத கஜ ராஜா' படத்தின் மூலமாக ஹிட் கொடுத்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மார்க் ஆண்டனி படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் . ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படமும், விஷாலுக்கு ரூ.100 கோடி வசூலை பெற்று தந்தது.
விஷாலுக்கு இணையான வில்லன் ரோலில், எஸ் ஜே சூர்யாவும் அப்பா - மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 'துப்பறிவாளன் 2' படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தவிர வேறு எந்தப் படமும் விஷாலின் கைவசம் இல்லை என்று சொல்லப்படுகிறது. விஷாலுக்கு பல இயக்குனர்கள் தேடி வந்து கதை சொல்லி வந்தாலும், வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாலும், நடிகர் சங்க கட்டடப் பணிகளில் தீவிரம் காட்டி வருவதாலும், அடுத்தடுத்த படங்களில் நடிக்காமல் உள்ளார் என கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூத்தாண்டவர் கோயிலில் நடந்த, சித்திரை திருவிழாவின் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிக்கு விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். விஷால் டயட் முறையை ஃ பாலோ செய்து வருவதாலும் சரியாக சாப்பிடாததால் தான் இந்த மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
ஏற்கனவே விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்து திறப்பு விழா நடைபெற்ற பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். அதற்கேற்ப இப்போது நடிகர் சங்கம் கட்டிடம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் திறப்பு விழாவும் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷால் தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

இந்த நாளில் விஷால் தனது திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஷாலுக்கும் அனிஷா அல்லா ரெட்டிக்கும் இடையில் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமண நிச்சயதார்த்தத்துடன் நின்றது.
தற்போது புதிய காதல் உறவில் இருப்பதாக விஷாலே கூறியுள்ள நிலையில் இவர் காதலிக்கும் பெண் யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில்... தற்போது இவரது காதலி குறித்த தகவல் கசிந்துள்ளது. விஷால் 35 வயதே ஆகும் பிரபல நடிகை சாய் தன்ஷிகாவை தான் தற்போது காதலித்து வருவதாகவும், இன்று மாலை சாய் தன்ஷிகா நடித்துள்ள 'யோகி டா' பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் விஷால் இந்த தகவலை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.





















