Actor Vishal: தங்கத்தேர் இழுத்து பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் விஷால்... வைரலாகும் வீடியோ
நடிகர் விஷால் தனது பிறந்தநாளை வடபழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்து கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
விஷால்
நடிகர் விஷால் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தனது 48 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் 5 வது ஆண்டாக முதியோர்களுக்கு காலை உணவு வழங்கினார் விஷால். இதனைத் தொடர்ந்து கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். சினிமாவில் நடிகைகளிடம் யாராவது அட்ஜஸ்ட் செய்துகொள்ள சொன்னால் அவர்களை செருப்பால் அடிக்கும்படி விஷால் கருத்து தெரிவித்தார். மேலும் ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும், தமிழ் திரைப்பட உலகில் 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்க நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது விரைவில் அமைக்கப்படும் என விஷால் தெரிவித்தார் .
தங்கத்தேர் இழுத்து விஷால் வழிபாடு
தனது பிறந்தநாளையொட்டி நடிகர் திரு.விஷால் அவர்கள் சென்னை வடபழனி ஆண்டவர் முருகப்பெருமான் கோவிலில் சுவாமி தரிசனம்....❤️🙏 pic.twitter.com/pVeUJRZpMZ
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) August 29, 2023
தனது கீழ்பாக்கம் மருத்துவமனை சென்றப்பின் அடுத்தபடியாக சென்னை வழபழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து விஷால் வழிபட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஷாலை தாக்கிய ஸ்ரீரெட்டி
Hi mr.womaniser &white hair very old uncle,when you are talking about a woman ,I think your tongue 👅 should be very careful in front of the media..the way u use a filthy language about a lady,the way you shiver ,the way you create problems to the good people everyone knows..you…
— Sri Reddy (@SriReddyTalks) August 29, 2024
மேலும் நடிகை ஸ்ரீரெட்டி விஷால் மீது பாலியல் புகார் அளித்தது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஷால் “ ஸ்ரீரெட்டி யாரென்று எனக்கு தெரியாது அவர் செய்த சேட்டைகள் தான் எனக்கு தெரியும். ஆதாரமில்லாமல் ஒருவர் மீது குற்றம் சொல்வது தவறானது “ என கருத்த் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் விஷாலை கடுமையாக தாக்கி பதிவ்விட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “ உன்னைச் சுற்றி இருந்த பெண்கள் எல்லாம் உன்னைவிட்டு ஓடிப்போனது , உன் திருமணம் நிச்சயம் வரை சென்று நின்றுபோனதற்கு என்ன காரணம் என்று பதில் சொல். என்னிடம் நிறைய செருப்புகள் இருக்கின்றன” என ஸ்ரீரெட்டியின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.