மேலும் அறிய

Actor Vishal: “சம்பளம் வாங்குவீங்க.. ஆனால் கடனை அடைக்க மாட்டிங்க? “ - விஷாலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி..

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆஜரான நடிகர் விஷாலிடம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆஜரான நடிகர் விஷாலிடம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

வழக்கின் பின்னணி 

நடிகர் விஷால் சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன்மூலம் அவர் சொந்தமாக பல படங்களை தயாரித்துள்ளார். இதனிடையே அவர் பட  தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகையை விஷாலுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துக் கொண்டு லைகா நிறுவனம் செலுத்தியது. அதன்படி கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தில் வெளியாகும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டது. 

இப்படியான நிலையில் விஷால் நடித்து கடந்த ஆண்டு வெளியான "வீரமே வாகை சூடும்" என்ற படம் வெளியானது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை தராமல் அந்த படத்தை ரிலீஸ் செய்யவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் தடை கேட்டு லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி ரூ.15 கோடியை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்ய, இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட ரூ.15 கோடி தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். ஆனால் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறியதாக லைகா நிறுவனம் அவமதிப்பு வழக்கு  தொடர்ந்திருந்தது. 

நீதிமன்றத்தில் விஷால் ஆஜர் 

இப்படியான நிலையில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் நடித்து செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசாகும் மார்க் ஆண்டனி படத்துக்கு தடை விதிப்பதாகவும், செப்டம்பர் 12 ஆம் தேதி விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் இன்று நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி  அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். 

அதன்படி, “பணத்தை திரும்ப செலுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?, ஒருவேளை பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் எதிர்காலத்தில் விஷாலின் அனைத்து படங்களுக்கும் தடை விதிக்கலாமா? என கேள்வி எழுப்பினர். மேலும் தொடர்ந்து படத்தில் நடிப்பீர்கள், அதன்மூலம் சம்பளம் பெறுவீர்கள், ஆனால் கடனை திரும செலுத்த மாட்டீர்களா? என விஷாலிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினர். நீங்கள் என்ன படிக்காத நபரா?, ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது படிக்கவில்லையா?, கையெழுத்திடுமாறு துப்பாக்கி வைத்து யாரேனும் மிரட்டினார்களா?” என நீதிபதி விஷாலிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். 

இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் லைகா நிறுவனத்துக்கும் விஷாலுக்கும் மட்டுமே சம்பந்தம் என்பதால் மார்க் ஆண்டனி மீதான தடை உத்தரவை நிறுத்தி வைத்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget