Thudikkum Karangal Teaser: ஆக்ஷனில் களமிறங்கிய விமல்.. வெளியானது ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் டீசர்!
நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் திரைப்படமான 'துடிக்கும் கரங்கள்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
![Thudikkum Karangal Teaser: ஆக்ஷனில் களமிறங்கிய விமல்.. வெளியானது ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் டீசர்! Actor vimal upcoming action movie Thudikkum karangal teaser out Thudikkum Karangal Teaser: ஆக்ஷனில் களமிறங்கிய விமல்.. வெளியானது ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் டீசர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/19/c37b892bb9ee30d7e2c44b1d7aee19071668842430923501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வேலுதாஸ் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து வரும் திரைப்படம் துடிக்கும் கரங்கள். இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
நடிகர் விமல் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விமலுக்கு நாயகியாக மும்பை மாடல் மிஷா நடித்துள்ளார்.
நடிகர்கள் சுரேஷ் மேனன், சதீஷ் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. இந்நிலையில் 'துடிக்கும் கரங்கள்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
View this post on Instagram
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விமல். பசங்க படம் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது படங்கள் ஏதும் பெரியளவில் வரவேற்பை பெறாத நிலையில், ஓ.டி.டி. தளத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
View this post on Instagram
விலங்கு வெப்சீரிஸுக்கு பிறகு விமல் தான் இழந்த மார்க்கெட்டையும் திரும்ப பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு பிறகு நடிகர் விமல் மீது மன்னர் வகையறா படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலன் பணமோசடி வழக்கை தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு பிறகு தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)