மேலும் அறிய

Irugapatru Movie: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விக்ரம் பிரபுவின் ‘இறுகப்பற்று’ படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் ‘இறுகப்பற்று’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் ‘இறுகப்பற்று’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

வெவ்வேறு விதமான கதைக் களங்களைச் சொல்வதிலும், படைப்பாற்றலின் எல்லைகளை விரிவாக்குவதிலும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் பொடன்ஷியல் ஸ்டூடியோஸ். 'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்' மற்றும் 'டாணாக்காரன்' போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமாவுக்குத் தரமானத் திரைப்படங்களைத் தருவதில் தொடர்ந்து தங்களின் பங்கைச் சிறப்பாக செய்து வருகிறது. 

தற்போது பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் அடுத்தத் தயாரிப்பான ‘இறுகப்பற்று’ வெளியீடுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் திறம்பட நடித்துள்ளனர்.

மனித உறவுகளின் சிக்கலான தன்மைகளைப் பற்றி பேசும் இந்த படம், ஜஸ்டின் பிரபாகரனின் ஆன்மாவைத் தொடும் இசையையும், கார்த்திக் நேதாவின் கவிதையான வரிகளையும் கொண்டுள்ளது. கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார், ஜேவி மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ், ஆடை வடிவமைப்பாளர்கள் பூர்ணிமா ராமசாமி, ஏகன் ஏகாம்பரநாதர் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

படத்தைப் பற்றி பேசுகையில், "நாங்கள் மீண்டும் ஒரு தனித்துவமான திரைப்படத்துடன் வருகிறோம், இது உணர்ச்சிகரமான, அழுத்தமான படைப்பாக இருக்கும். இயக்குநர் யுவராஜின் திரைக்கதை நிச்சயமாக பார்வையாளர்களுக்கு, குறிப்பாக ஜோடிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்" என்று தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது. 

திருமணமான தம்பதிகளுக்கிடையேயான புரிதலைப் பற்றி தெரிந்து கொள்ள, தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்வின் மூலம் தம்பதிகளிடையே நேர்மறையான தாக்கமும் ஏற்பட்டுள்ளது. 'இறுகப்பற்று' செப்டம்பர் மாதம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

மேலும் படிக்க,

Rahul Gandhi: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..! நாடாளுமன்றத்தில் எண்ட்ரீ, டிவிட்டர் பயோவில் ராகுல் காந்தியின் சம்பவம்..!

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget