22 Years of Narasimha: ‘பாகிஸ்தான் தீவிரவாதியும்.. போலீஸ் விஜயகாந்தும்’.. 22 ஆண்டுகள் நிறைவு செய்த நரசிம்மா..!
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான போலீஸ் படமான நரசிம்மா படம் இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான போலீஸ் படமான நரசிம்மா படம் இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
விஜயகாந்தின் மற்றுமொரு போலீஸ் படம்
பொதுவாக தமிழ் சினிமாவில் அதிக அளவில் போலீஸ் பீடங்களில் நடித்த நடிகர் யார்?என்ற கேள்வி முன்வைத்தால் சட்டென்று அனைவரது பதிலும் விஜயகாந்த் என்று தான் இருக்கும். தனது சினிமா கேரியரில் போதும் போதும் என்ற அளவுக்கு காவல்துறை வேடத்தில் அவர் நடித்து விட்டார். ஆனாலும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்களை கவரும் வகையிலே இன்றளவும் உள்ளது. அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு வெளியானது நரசிம்மா படம்.
மறைந்த இயக்குனர் திருப்பதி சாமி இயக்கிய இந்தப் படத்தில் இஷா கோபிகர், ரகுவரன், நாசர்,ஆனந்தராஜ்,ராகுல் தேவ்,வடிவேலு, தியாகு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மணி ஷர்மா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
காஷ்மீர் பிரிவினை வாதத்திற்காக போராடும் தீவிரவாதிகள் இந்தியாவில் முக்கியமானவர்களை கொல்லவும், பல இடங்களை தவிர்க்கவும் திட்டமிடுகிறார்கள் இந்த சதி திட்டத்தை திறமையான காவல்துறை அதிகாரியாக வரும் நரசிம்மா எவ்வாறு முறியடிக்கிறார் என்பதை இப்படத்தின் கதை ஆகும்.
வழக்கமான போலீஸ் கதையாக இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையால் நரசிம்மா படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த படத்தை நடிகர் விஜயகாந்த் தனது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் மூலம் சொந்தமாக தயாரித்தார். நரசிம்மா படத்தை முதலில், விஜயகாந்தை வைத்து வல்லரசு படத்தை இயக்கிய என்.மகாராஜன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் வேறு படத்தில் கமிட் ஆனதால் திருப்பதி சாமியுடன் இணைந்தார். முதலில் ஹீரோயின் கேரக்டரில் நடிக்க ரம்பா அணுகப்பட்ட நிலையில், பின்னர் இஷா கோபிகர் தேர்வு செய்யப்பட்டார்.
ரிலீசுக்கு முன்பு நடந்த துயரம்
நரசிம்மா படத்தின் எடிட்டிங் பணிகளை பார்வையிட்டு வீடு திரும்பிய இயக்குனர் திருப்பதி சாமி கார் விபத்தில் உயிரிழந்தார். படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனர் மரணம் அடைந்தது விஜயகாந்த் ரசிகர்களை சோகத்தில் ஆக்கியது.
வடிவேலுவின் காமெடி - மணிசர்மா இசை
இந்தப் படத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி ரசிகர்களை கவர்ந்தது. லாலா என்னும் பெயரில் வரும் அவர் இஷா கோபிகரை ஒருதலையாக காதலிக்கும் காட்சிகள் சிரிப்பை வரவழைத்தது. கரண்டுக்கே என்னை தொட்டா ஷாக்கடிக்கும் உள்ளிட்ட படத்தின் வசனங்கள் இன்றளவும் மீம் டெம்பிளேட்டுகளாக உள்ளது.
இதே போல இசையமைப்பாளர் மணி சர்மா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆயின. குறிப்பாக எகிப்து ராணி, காதல் ஆராரோ, லாலா நந்தலாலா உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக உள்ளது. இதில் பா.விஜய் எழுதிய எகிப்து ராணி பாடல் அவரின் நூறாவது பாடலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.