Vijayakanth: மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்- போண்டா மணி மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்
நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
போண்டா மணி
வடிவேலு, விவேக் போன்ற் பல்வேறு முன்னணி நகைச்சுவை நடிகர்களுடம் இணைந்து நடித்த நடிகர் போண்டா மணி நேற்று இரவு தனது 60 வயதில் காலமானார். கிட்னி செயலிழந்து தொடர் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்துள்ளது தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் திரையில் இணைந்து நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் மற்றும் தே.மு. தி . க நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் போண்டா மணி அவர்களின் இறப்பிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் தளத்தில் விஜயகாந்த் “ பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் நண்பர் களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்.
— Vijayakant (@iVijayakant) December 24, 2023
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் (1-2) #போண்டாமணி pic.twitter.com/6v2CgrYd3a
நண்பர் களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Vijayakant (@iVijayakant) December 24, 2023
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். #போன்டாமணி (2-2) pic.twitter.com/e5MyJRp48Xபோண்டா மணிஇலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த போண்டா மணி, பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான பவுனு பவுனு படத்தின் மூலம் திரையில் தோன்றினார். இதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு தென்றல் வரும் தெரு படத்தின் மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். போண்டா மணி மக்களிடத்தில் பரவலாக அறியப்பட்டது நகைச்சுவைக் காட்சிகளின் வழியாக. வடிவேலு மற்றும் மறைந்த நடிகர் விவேக் ஆகியோருடன் இவர் நடித்த பல நகைச்சுவைக் காட்சிகள் மக்களால் ரசித்து பார்க்கப் படுபவை.கிட்சி செயலிழந்து தொடர்ச்சியான சிகிச்சையில் இருந்து வந்த போண்டா மணி நேற்று பல்லாவரத்தில் அருகேயுள்ள பொழிச்சலூரில் இருக்கும் அவருடைய வீட்டில் இருக்கும் போது போண்டா மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக, போண்டா மணியை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் டதிரையுலக பிரபலங்கள் , பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது.