Tamannaah - Vijay Varma: தமன்னாவால் காதலருக்கு இப்படி ஒரு சோதனையா... வீட்டில் அழுத்தம்... திருமணம் பற்றி மனம் திறந்த விஜய் வர்மா!
தமன்னாவுடன் தனது காதல் குறித்து மனம் திறந்துள்ள விஜய் வர்மா, திருமணம் தொடர்பாக தான் கடும் அழுத்தத்தை சந்தித்து வருவதாகக் கூறியுள்ளார்.
படப்பிடிப்பின்போது மலர்ந்த காதல்
பல மாதங்களாக இருக்கா, இல்லையா என கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தமன்னா சமீபத்தில்தான் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்வதை ஒப்புக்கொண்டார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பு தளத்தில் தங்களது உறவு இயல்பாக மலர்ந்ததாக தமன்னா வெளிப்படுத்தினார். லஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம்தான் தமன்னாவும் விஜய்யும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ஆகும்.
விஜய் பற்றி தமன்னா
விஜய்யை பற்றி விவரிக்கும்போது, “அவர் நான் மிகவும் எதிர்பார்க்கும் ஒருவர்... நான் மிகவும் அக்கறை செலுத்தும் நபர், ஆம், அவர் எனக்கான மகிழ்ச்சியான இடம்" என்று கூறினார்.
வாழ்வில் நிறைய அன்பு இருக்கு..
வெகு நாட்களாக தங்களது காதலைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு உறுதியான பதிலை கொடுக்காமல் விஜய் வர்மா தவிர்த்து வந்தார். இந்நிலையில் அண்மையில் யூடியூப் சேனலில் உரையாடல் ஒன்றில் பேசிய விஜய் வர்மா, தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஏன் இதுவரை வெளியில் பேசவில்லை என்பது குறித்து மனம் திறந்தார்.
"சரியான நேரம் வரும்போது நீங்கள் அதைப் பற்றி அறிவீர்கள், ஆனால் இப்போது என் வாழ்க்கையில் நிறைய அன்பும் காதலும் இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து தான் தமன்னாவை காதலிப்பதாக வெளிப்படையாகக் கூறிய விஜய் வர்மா, தனது வாழ்க்கையில் வில்லன் கட்டத்தில் இருந்து தற்போது தான் ரொமான்ஸ் கட்டத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
திருமணத்துக்கு அழுத்தம்
திருமணம் குறித்து தனது குடும்பத்தில் தனக்கு அதிகப்படியான அழுத்தம் இருந்து வருவதாக தற்போது தெரிவித்துள்ளார் விஜய் வர்மா. “நான் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடைய சமூகத்தில் ஆண்கள் 16 வயதடைந்து விட்டால் அவர்கள் திருமணத்திற்கு தகுதியான ஆளாகக் கருதப்படுவார்கள்.
என்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி எனது அம்மா பல ஆண்டுகளாக கேட்டு வருகிறார். இன்று வரை எனக்கு ஃபோன் செய்தால் அவர் கேட்கும் முதல் விஷயம் என்னுடையத் திருமணத்தைப் பற்றியதாக தான் இருக்கும். தற்போது என்னுடைய வாழ்க்கை வெற்றிகரமாக போய்க் கொண்டிருப்பதால் மட்டும் தான் என்னால் இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்க முடிகிறது ” என்று கூறியிருக்கிறார் விஜய் வர்மா.