Jawan Update: பாலிவுட்டில் சிறப்புத்தோற்றத்தில் கலக்கவிருக்கும் விஜய்! சம்பள விவரத்தில் வெளியான புதுத்தகவல்!
ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் 'விக்ரம்' மற்றும் மாதவனின் 'ராக்கெட்ரி' ஆகிய படங்களில் கேமியோ ரோலில் நடித்ததற்காக சூர்யா ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வைரலானது. அதேபோல் தற்போது நடிகர் விஜய் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
View this post on Instagram
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளிவருகிறது. அதேபோல், நடிகர் விஜய் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் வதந்திகள் பரவியது. இந்த சூழலில் அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்