Leo update: காஷ்மீரில் நிலநடுக்கம்.. விஜய்யின் லியோ படக்குழுவிற்கு என்ன ஆச்சு? தயாரிப்பாளர் தந்த அப்டேட்
காஷ்மீர் நிலநடுக்கம் தொடர்பாக விஜய்யின் லியோ படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு இணையத்தில் வைரலாகியுள்ளது.
காஷ்மீர் நிலநடுக்கம் தொடர்பாக விஜயின் லியோ படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு இணையத்தில் வைரலாகியுள்ளது.
”பாதுகாப்பாக இருக்கிறோம்”
செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா (we are safe nanba) என பதிவிடப்பட்டுள்ளது. அதோடு, ரஜினியின் சந்திரமுகி திரைப்படத்தில் அரண்மனையில் வடிவேலு தனியாக மாட்டிக்கொண்ட போது, அங்கிருக்கும் பொருட்கள் கீழே விழுந்து உருளும் காட்சி தொடர்பான சிறிய வீடியோ காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டை பார்த்து சிரிப்பதை போன்ற எமோஜியை, லியோ படத்தில் நடித்து வரும் பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
காஷ்மீரில் நிலநடுக்கம்:
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் பல வட இந்திய மாநிலங்களில் கூட உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சுமார் இரண்டு நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பல கட்டடங்கள் குலுங்கின. இந்நிலையில் தான், காஷ்மீரில் படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ள லியோ படக்குழுவின்ர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
விஜயின் லியோ:
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள, விஜய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர் மற்றும் பிரியா ஆனந்த் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜம்மு-காஷ்மீர்ல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு தீவிரம்:
தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்ற லியோ படக்குழுவினர் படத்தின் முக்கியமான காட்சிகளை அங்கு படமாக்கி வருகின்றனர். ஏற்கனவே சஞ்சய் தத் மற்றும் மிஷ்கின் ஆகியோர் தங்கள் தொடர்பான காட்சிகளை படப்பிடிப்பை பூர்த்தி செய்துள்ளனர். காஷ்மீரில் படப்பிடிப்பு பணிகளை முடித்த பிறகு, அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகளை சென்னையில் தொடங்க லியோ படக்குழு திட்டமிட்டுள்ளது.
டெக்னிகல் குழு:
லியோ படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர் பணியாற்ற, லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் வசனங்களை எழுதுகின்றனர். லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூவில் இப்படம் இணையும் என கூறப்படுவதால், லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெளியீட்டு தேதி:
லியோ படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 ஆம் தேதி திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை, மறுநாள் 25 ஆம் தேதி விஜயதசமி என விடுமுறை நாட்கள் வருகிறது. ஆக அக்டோபர் 19 தொடங்கி 24 ஆம் தேதி 6 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் அந்த நாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.