மேலும் அறிய

Surya Sethupathi : நடிகன் பையன் நடிகன் ஆகக்கூடாதா..நெப்போட்டிஸம் பற்றி போல்டாக பேசிய சூர்யா சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நெப்போட்டிஸம் குறித்து பேசியுள்ள கருத்து சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது

சூர்யா சேதுபதி

தமிழ், தெலுங்கு , இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. நடிப்பு தவிர்த்து இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் கேள்விகளுக்கு உட்பட்டாலும் தற்போது ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

விஜய் சேதுபதிக்கு அடுத்து அவரது மகன் சூர்யா சேதுபதி சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நிலையில், சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் பீனிக்ஸ் வீழான் என்ற படம் உருவாகியுள்ளது  பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம்  வெளியாகியது. வரும் நவம்பர் 14 ஆம் தேதி சூர்யாவின் கங்குவா திரைப்படத்துடன் இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. 

நெப்போட்டிஸம் குறித்து சூர்யா சேதுபதி

சூர்யா நடித்துள்ள ஃபீனிக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே அவர்மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தனது அப்பா தனக்கு ஒர் நாளைக்கு 500 ரூபாய் தான் கொடுத்ததாக சூர்யா கூறியதாக இணையத்தில் தகவல்கள் பரவின. ஆனால் இந்த கருத்தை தான் சொல்லவே இல்லை என சூர்யா தரப்பில் கூறப்பட்டது. விஜய் சேதுபதியின் மகன் , நடிகர் விஜயின் மகன் , பாடகர் திப்புவின் மகன் , நடிகர் தனுஷின் மகன் , என இப்படி அடுத்தடுத்து பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவிற்கு வருவது பாலிவுட் போலவே கோலிவுட்டிலும் நெப்போடிஸம் அதிகரித்துள்ளதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

நெப்போட்டிஸம் குறித்து சூர்யா சேதுபதி சமீபத்தில் பேசியுள்ளார்  " ஒரு நடிகனின் மகனாக இருப்பதால் உங்களுக்கு வாய்ப்பு வேண்டுமானால் எளிதாக கிடைத்துவிடலாம். ஆனால் நீங்கள் வெற்றிபெறுவது உங்கள் திறமையினால் தான் சாத்தியமாகும். லாட்டரி ஒரு முறை தான் அடிக்கும். என் அம்மா படங்களைப் பார்த்துவிட்டு எனக்கு ஒரு காட்சியை பற்றி விளக்கிச் சொல்வார். நமக்கு அப்பாதான ஹீரோ. அவர் போகும் பாதையில் தானே நாமும் போக ஆசைப்படுவோம். அந்த மாதிரி என் அப்பா எனக்கு சொன்னதை கேட்டு எனக்கு இதுதான் வரும் என்று நான் நம்புகிறேன். அதை அடையவே நான் முயற்சி செய்கிறேன். இதை நெப்போட்டிஸம் என்று சொன்னால் எனக்கு அதில் சில சந்தேகம் இருக்கிறது. ஒரு டாக்டரின் மகன் டாக்டராகிறான். போலிஸீன் மகன் போலீஸாகிறான். அதே மாதிரி ஒரு நடிகனின் மகன் நடிகனாகக் கூடாதா ? இன்னும் சொல்லப்போனால் நடிகனின் மகனாக இருந்து வெற்றிபெறுவது தான் இன்னும் சிரமம். ஏனால் நெப்போ கிட்ஸ் என்று ஒரு பக்கம் நம்மை அடிக்கவும் செய்கிறார்கள்' என்று சூர்யா பேசியுள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாசிசமா , பாயாசமா என்பது சினிமா வசனம் போல் உள்ளது - விஜய் பேச்சு குறித்து சிதம்பரம்
பாசிசமா , பாயாசமா என்பது சினிமா வசனம் போல் உள்ளது - விஜய் பேச்சு குறித்து சிதம்பரம்
Sellur Raju: கமல் மாதிரி இல்லாமல் விஜய் நன்றாக மிக தெளிவாக பேசினார்- செல்லூர் கே.ராஜூ
கமல் மாதிரி இல்லாமல் விஜய் நன்றாக மிக தெளிவாக பேசினார்- செல்லூர் கே.ராஜூ
Watch Video: திடீரென அந்தரத்தில் பறந்த பிஎம்டபள்யூ கார், டிரக் - சாலையில் நடந்தது என்ன? வீடியோ வைரல்
Watch Video: திடீரென அந்தரத்தில் பறந்த பிஎம்டபள்யூ கார், டிரக் - சாலையில் நடந்தது என்ன? வீடியோ வைரல்
விஜய் ஒரே குட்டையில் ஊறிய மட்டை -  ஹெச்.ராஜா விமர்சனம்
விஜய் ஒரே குட்டையில் ஊறிய மட்டை - ஹெச்.ராஜா விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Teacher Slaps Student : மாணவியை தாக்கிய TEACHER நடுரோட்டில் நடந்த கொடூரம் அதிரடி காட்டிய போலீஸ்TVK Maanadu Issue உடைந்து கிடக்கும் நாற்காலிகள்குப்பைக் கூளமான மாநாடு திடல் விளாசும் உள்ளூர் மக்கள்Anjalai Ammal Profile : தென்னிந்தியாவின் ஜான்சிராணி தவெக போற்றும் சிங்கப்பெண் அஞ்சலை அம்மாள்?TVK Maanadu Vijay Speech | பெயர் சொல்ல பயந்தாரா விஜய்? ஒளிஞ்சு விளையாடியது ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாசிசமா , பாயாசமா என்பது சினிமா வசனம் போல் உள்ளது - விஜய் பேச்சு குறித்து சிதம்பரம்
பாசிசமா , பாயாசமா என்பது சினிமா வசனம் போல் உள்ளது - விஜய் பேச்சு குறித்து சிதம்பரம்
Sellur Raju: கமல் மாதிரி இல்லாமல் விஜய் நன்றாக மிக தெளிவாக பேசினார்- செல்லூர் கே.ராஜூ
கமல் மாதிரி இல்லாமல் விஜய் நன்றாக மிக தெளிவாக பேசினார்- செல்லூர் கே.ராஜூ
Watch Video: திடீரென அந்தரத்தில் பறந்த பிஎம்டபள்யூ கார், டிரக் - சாலையில் நடந்தது என்ன? வீடியோ வைரல்
Watch Video: திடீரென அந்தரத்தில் பறந்த பிஎம்டபள்யூ கார், டிரக் - சாலையில் நடந்தது என்ன? வீடியோ வைரல்
விஜய் ஒரே குட்டையில் ஊறிய மட்டை -  ஹெச்.ராஜா விமர்சனம்
விஜய் ஒரே குட்டையில் ஊறிய மட்டை - ஹெச்.ராஜா விமர்சனம்
Census of India: வெயிட்டிங் ஓவர் - அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2028-க்குள் தொகுதி மறுவரையறை?
Census of India: வெயிட்டிங் ஓவர் - அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2028-க்குள் தொகுதி மறுவரையறை?
New Rule From 1st Nov: நவ.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் - கிரெடிட் கார்ட் தொடங்கி ஐஆர்சிடிசி விதி வரை
New Rule From 1st Nov: நவ.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் - கிரெடிட் கார்ட் தொடங்கி ஐஆர்சிடிசி விதி வரை
Kasaragod: கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து - 154 பக்தர்கள் காயம், 10 பேர் கவலைக்கிடம் - கேரளாவில் அதிர்ச்சி
Kasaragod: கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து - 154 பக்தர்கள் காயம், 10 பேர் கவலைக்கிடம் - கேரளாவில் அதிர்ச்சி
Madras HC: ”ஷரியத் கவுன்சில் நீதிமன்றமா? விவாகரத்து வழங்க உரிமை இல்லை” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
Madras HC: ”ஷரியத் கவுன்சில் நீதிமன்றமா? விவாகரத்து வழங்க உரிமை இல்லை” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
Embed widget