மேலும் அறிய

Vijay Sethupathi: விமர்சனங்களுக்கு “மகாராஜா” படம் மூலம் பதிலடி; விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!

மகாராஜா படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 

மகாராஜா படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அபிராமி, மம்தா மோகன் தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம்புலி, அருள்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “மகாராஜா”. இந்த படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படம் பற்றி பாசிட்டிவான கமெண்டுகள் வெளியானதால் தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

இதனிடையே மகாராஜா படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “மகாராஜா படத்தின் கதையை கேட்கும்போது மிகப்பெரிய பிரமிப்பும், நம்பிக்கையும் இருந்தது. இது எப்படி சாத்தியமாக போகிறது என்ற கேள்வி ஒவ்வொரு படத்துக்கு முன்னாடியும் எழும். நடித்து முடித்து விடுவோம். கதை கேட்கும்போது மட்டும் தான் கதை ஈர்க்கக்கூடிய பகுதிகள் எல்லாம் தெரியும். நடித்தால் அந்த கணக்கெல்லாம் தெரியாது.

நடித்து முடித்து விட்டு இந்த படம் எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்பதை எல்லாரையும் கேட்டு தான் முடிவு செய்வோம். ஆனால் மகாராஜா படத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தோம். தயாரிப்பாளருக்கு சராசரியாக போட்ட காசை எடுப்போம் என நினைத்தோம். என்னுடைய முந்தைய சில படங்கள் சரியாக போகவில்லை. இனிமேல் விஜய் சேதுபதிக்கு கூட்டமா வரப்போகுதுன்னு சிலர் சொன்னதாக நண்பர் சொன்னார். 

இந்த மாதிரி நிறைய விஷயங்கள், கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காக இப்படம் பண்ணவில்லை. என்னை சுற்றி இருப்பவர்கள் தான் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் தான் பதிலும் சொல்கிறார்கள். அந்த படமாக மகாராஜா அமைந்ததில் சந்தோசமாக உள்ளது. பத்திரிக்கையாளர் காட்சி திரையிடப்பட்ட அந்த நாள் இரவு ரொம்ப இனிமையாக இருந்தது. மக்களுக்கும், ஊடக துறையினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Yash:
Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்
Anirudh:
Anirudh: "பென்சில் மாதிரி இருந்துகிட்டு.." மருமகன் அனிருத்தைப் பார்த்து மாமனார் கலாநிதி மாறன் சொன்னது என்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Himalayan 750: ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
"30 அடி உயர தொட்டியில் சிறுவன் ஏறினானா?" - காவல்துறையின் விளக்கத்தை சந்தேகித்த பூம்புகார் எம்.எல்.ஏ!
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
Embed widget