Beast Trailer Review: “நமக்கு அரசியலெல்லாம் செட் ஆவாது” - தெறிக்கும் புல்லட்.. மிரட்டும் விஜய்.. இது பீஸ்ட் ரிவ்யூ
பீஸ்ட் படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள அம்சங்களை இந்தக் கட்டுரையில் அலசலாம்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜயை இயக்கப்போவது யார் என்று விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில், லிப்டை ஓபன் செய்து கொண்டு நான்தான் என்று வந்து நின்றார் நெல்சன். ‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் கவனம் ஈர்த்திருந்த நெல்சன், அடுத்ததாக வெளியான ‘டாக்டர்’ படமும் ஹிட் அடித்த நிலையில், இந்தப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தனக்கே உரித்தான காமெடி ட்ராக்கில், அரபிக்குத்தில் விஜயை பேச வைத்து ஃபர்ஸ்ட் சிங்கிளை மில்லியன்களை தொடவைத்த நெல்சன், அடுத்ததாக வந்த ஜாலியா ஜிம்கானா ஹிட் அடிக்க வைத்தார். இந்த நிலையில்தான் இன்று பீஸ்ட் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்ற சொல்லப்பட்டது. அந்த அறிவிப்பின் படி ட்ரெய்லரும் வெளியிடப்பட்டிருக்கிறது.
படத்தின் ஒன்லைன்
படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போதே படத்தின் ஒன்லைனை நம்மால் கணித்து விட முடிகிறது. சென்னையில் உள்ள ஒரு மாலை, தீவிரவாதிகள் சிறைபிடித்துவிட, தற்செயலாக உள்ளே இருக்கும் சோல்ஜர் விஜய் அவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதைகளம்.
“காலையில நல்லா தூங்கிட்டு இருக்கேன் திடீர்னு 10.30 மணிக்கு ஒரு போனு” என செல்வராகவன் குரலில் ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது. இயக்குநராகவே பார்த்து பழகிய செல்வராகவனை முதன்முறையாக நடிகராக பார்ப்பது நன்றாக இருக்கிறது.
முதலில் செல்வராகவன் வில்லனாக வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் அரசாங்கத்துக்கும், சிறை பிடிக்கப்பட்ட மாலுக்கும் இடையிலான தகவல்களை பரிமாறும் கதாபாத்திரமாக நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. நெல்சனின் காமெடி ட்ராக்கில் அவர் கதாபாத்திரம் நிச்சயம் திரையரங்கில் அப்லாசை அள்ளும். இருப்பினும் அவர் வில்லனகா மாறவும் வாய்ப்பு இருக்கிறது
விஜய் எண்ட்ரீ
சரி எப்படா விஜய்யை காட்டூவீங்க என ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்க அவரே, இந்த விஷயத்துல குட் நியூஸ் என்னவென்றால் உள்ளே நம்ம பையன் இருக்கான் என்று சொல்ல, எகிடுதகிடு ஆக்ஷனனோடு டைவ் அடித்து எண்ட்ரி ஆகிறார் விஜய். புல்லட்கள் தெறிக்க, ஜெட் ப்ளேன்கள் பறக்க, வீரராகவனாக ஸ்லோமோஷனில் கோட் சூட்டுடன் கோடாலியுடன் நடந்து வருகிறார் விஜய்.
“இப்படி ஒரு ஆள் உள்ளே இருக்கும் போது மாலை ஹைஜேக் பண்ணா என்ன ஆகும்” “வீரா தீவிரவாதிகளை எப்படி ஓட விட்டிருப்பான்” என பில்டப்புகளை ஏற்ற, திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் என அனிருத்தின் குரல் தெறிக்கிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு படங்களிலும், நெல்சனின் திரைக்கதைக்கு அனிருத்தின் இசை பெரும் பலமாக இருந்ததை போல இந்தப்படத்திலும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கத்தி, மாஸ்டர் பாடல்களும், பின்னணி இசையும் பம்பர் ஹிட் அடித்திருக்கும் நிலையில், அந்த கம்பேரிசனை பீஸ்ட்டில் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
விக்ரம் - பீஸ்ட்
“தொடர்ந்து விஜய் பயமா இருக்கா, இனிமே இன்னும் பயங்கரமாக இருக்கும்” என விஜய் சொல்லி முடிக்கும் அடுத்த கணம் புல்லட்கள் விஜயை நோக்கி படையெடுத்து வர, விக்ரம் டீசரில் கமல் புல்லட்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஷீல்டை வைத்து மறைத்துவைத்துக்கொள்வது போல, இதில் இரண்டு ஷீல்டுகள் விஜயை காப்பாற்ற வருகின்றன.
எங்க, விஜய்க்கான பஞ்ச லைனை காணோம் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த போதே, “அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட் ஆவது” ஐ எம் நாட் எ பொலிட்டிசியன், ஐ எம் எ சோல்ஜர்” என சொல்லி டைட்டிலுக்கும் புல்லட்களையும் பறக்க வைத்து விட்டார்.
படம் மாலுக்குள்ளே சுற்றி வரும் என்பது தெரிந்து விட்டது. அப்படியானால் படம் எப்படி சுவராஸ்சியமானதாக இருக்கும் என்ற கேள்வி எழலாம். ஆனால் அந்த இடத்தில் தனது கிரிஸ்பியான திரைக்கதை மூலம் நிச்சயம் நெல்சன் ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கலாம். ஆனால் கதை ஒன் லைனும், அதன் களமும் மிக சிறியது என்பதால் விஜய் படம் பார்க்கும் முழு திருபதி வருமா என்பது நிச்சயம் சந்தேகம்தான். அதை நெல்சன் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை பார்க்கலாம்.