(Source: ECI/ABP News/ABP Majha)
Maruthamalai: என்னது.. மருதமலை படத்துல நம்ம விஜய் நடிக்க வேண்டியதா..? ஆக்ஷன்கிங் எப்படி வந்தாரு? - சுராஜ் பதில்..!
மருதமலைப் படத்தின் கதையை முதலில் நடிகர் விஜயிடம் தான் சொல்லியதாகவும் படத்தில் நடிக்க விஜய் சம்மதம் தெரிவித்து அட்வான்ஸ் கொடுத்ததாகவு பகிர்ந்துகொண்டார் இயக்குனர் சுராஜ்.
இளையத் தளபதியின் அடுத்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்று பெரும் பரபரப்பு நிலவி வந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு தளபதி 68 படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. இந்நிலையில் அர்ஜுன் நடித்து வெளிவந்த மருதமலை திரைப்படத்தின் கதை முதலில் விஜய்யிடம் தான் சொன்னதாக தெரிவித்துள்ளார் மருதமலை படத்தின் இயக்குனர் சுராஜ்.
அட்வான்ஸ் வாங்கிய விஜய்:
படிக்காதவன், கத்தி சண்டை, நாய் சேகர் ஆகியத் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜின் சாய் வித் சித்ராவில் பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் இயக்குனர் சுந்தர் சியுடன் தான் உதவி இயக்குனராக இருந்த பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் சுராஜ். மேலும் தான் இயக்கிய மருதமலை படத்தின் கதையை முதலில் நடிகர் விஜயிடம் சொன்னதாகவும் அந்தப் படத்தின் கதையை கேட்ட உடனே விஜய் முன்பணம் கொடுத்துவிட்டதாகவும் பகிர்ந்துள்ளார்.
கிரி படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்தேன். கிரி படத்தின் வெற்றிக்குப்பின் நான் நடிகர் விஜயிடம் மருதமலை படத்தின் கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது இந்தப் படத்தில் தான் நடிப்பதாக சொல்லி முன்பணமும் கொடுத்தார். இதற்கிடையில் விஜய் சச்சின் படத்தில் நடிக்க சம்மதித்திருந்த காரணத்தில் விஜய் என்னிடம் சச்சின் படத்தை முடித்தபின் மருதமலை படத்தில் நடிப்பதாக தெரிவித்தார். நானும் சம்மதித்து தலைநகரம் படத்தை எடுத்து முடித்தேன்.
அர்ஜூன் வந்தது எப்படி?
தலைநகரம் படம் நல்ல வெற்றி பெற்றது.அப்போது எனக்கு தயாரிப்பாளர் ஒருவர் அழைத்து அஜித்குமாருக்கு கதை இருக்கா? என்று கேட்டார். நான் மருதமலை படத்தின் கதையை சொன்னேன். தயாரிப்பாளருக்கு கதை பிடித்திருந்தது. ஆனால் அபோது இருந்த சிக்கல் என்னவென்றால் அஜித் சார் அப்போது தான் கிரீடம் படத்தில் போலீஸாக நடித்து வந்தார். பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்னை அழைத்து இந்த கதைக்கு யார் சரியான ஆள் என்று கேட்டார். நான் யோசிக்காம அர்ஜூன் பெயரை சொன்னேன். பிறகு அர்ஜூன் சாரிடம் கதை சொன்னேன்.
அர்ஜுன் சார்தான் "ஏ.சி.,டி.எஸ்.பி. போன்ற எத்தனை கதாபாத்திரத்தின் நடித்து இந்தப் படத்தில் கான்ஸ்டபிளாக நடிக்க சொல்றியா?" என்று நகைச்சுவையாகச் சொன்னார். அவர் இந்தப் படத்தின் நடிக்க சம்மதித்தார். வடிவேலு மற்றும் அர்ஜுன் ஆகியவர்கள் நடிப்பில் மருதமலை பெரிய வெற்றி நடித்தது. அந்தப் படம் எனக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை கொடுத்தது” என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஒருவேளை விஜய் இந்தப் படத்தில் நடித்திருந்தால் விஜய் மற்றும் வடிவேலு ஆகிய இருவரின் கெமிஸ்ட்ரி எப்படியானதாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்ப்பது சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது. வசீகரா,மதுர,பகவதி ஆகியப் படங்களில் இவர்களின் காம்பினேஷனை நாம் பார்த்திருக்கிறோம் தானே.