மேலும் அறிய

Vijay Antony : அந்த காட்சியை நீக்க முடிவு செய்துவிட்டோம்...மழை பிடிக்காத மனிதன் சர்ச்சை குறித்து விஜய் ஆண்டனி

மழை பிடிக்காத மனிதன் படத்தில் வரும் அறிமுக காட்சியை நீக்க தயாரிப்பாளரும் இயக்குநரும் பேசி முடிவெடுத்துள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்

மழை பிடிக்காத மனிதன்

 நடிகர் விஜய் ஆண்டனி நடித்து விஜய் மில்டன் இயக்கிய மழை பிடிக்காத மனிதன் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மேகா ஆகாஷ் , சரத்குமார் , பிரியா பவானி சங்கர் , சரண்யா பொண்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்.  அதில், படத்தின் முதல் நிமிடத்தில் வரும் காட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அது படத்தில் எப்படி இணைக்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறினார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த முதல் ஒரு நிமிடத்தை தயாரிப்பாளர் தரப்பினர் இணைத்ததாகவும், படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி அதை இணைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. சினிமா ஆர்வலரான ப்ளூ சட்டை மாறன் விஜய் ஆண்டனி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தது சமூக வலைதளங்களில் வைரலனாது. 

இந்த நிலையில், விஜய் ஆண்டனி தற்போது இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக் காட்சியை தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக எனது நண்பர், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை." என்று விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார். 

அறிமுக காட்சியை நீக்க முடிவு

தற்போது படத்தில் இடம்பெற்ற அந்த அறிமுக காட்சியை நீக்க தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பேசி முடிவுக்கு வந்துள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ஓர் அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்களும் இயக்குநரும் கலந்து பேசி அதை இன்று முதல் திரையரங்குகளில் நீக்கி விடுவதென முடிவு எடுத்துவிட்டனர். இந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை திரையரங்களில் பார்த்து ஆதரவு தருமாறு தங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என்றும் அன்புடன், விஜய் ஆண்டனி." என்று தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க : Ilaiyaraaja : 2 கோடி இழப்பீடு கேட்ட இளையராஜா.. மஞ்சும்மெல் பாய்ஸ் கொடுத்தது எவ்வளவு?

Baakiyalakshmi serial August 5: செத்துப்போக துணிந்த இனியாவை காப்பாற்றிய பாக்யா... காலையிலேயே ஈஸ்வரிக்கு காத்திருந்த ஷாக்...

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
கோலியின் சத வேட்டை: சச்சினின்
கோலியின் சத வேட்டை: சச்சினின் "நூறு சதங்கள்" சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை சதங்கள் தேவை?
AI படுத்தும் பாடு; வீடியோல எது உண்மை, எது பொய்.? எப்படி கண்டுபிடிக்கறது.?
AI படுத்தும் பாடு; வீடியோல எது உண்மை, எது பொய்.? எப்படி கண்டுபிடிக்கறது.?
Embed widget