Ilaiyaraaja : 2 கோடி இழப்பீடு கேட்ட இளையராஜா.. மஞ்சும்மெல் பாய்ஸ் கொடுத்தது எவ்வளவு?
கண்மணி அன்போடு பாடலை பயன்படுத்தியதற்காக மஞ்சும்மெல் பாய்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து தற்போது அவருக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது
மஞ்சுமெல் பாய்ஸ்
கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் மஞ்சுமெல் பாய்ஸ். இப்படத்தின் அனுமதியின்றி இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும் படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என்றும் அனுமதி இல்லாமல் பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
குணா படத்தின் பாடலை படத்தில் பயண்படுத்துவதற்கான உரிமத்தை அப்படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டு அதற்குரிய தொகையையும் முன்பே செலுத்திவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவவன் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தான் இசையமைத்த பாடல்கள் உரிமம் முழுவதும் தனக்கே சொந்தமானவை என்றும் தன் அனுமதியின்றி தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்துவது சட்ட விரோதமானது என இளையராஜா அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தற்போது சமாதானத்திற்கு வந்துள்ளது.
2 கோடி கேட்ட இளையராஜா
Manjummel Boys makers pay 60 Lakhs to Ilaiyaraaja as compensation for copyright infringement; Reports - PINKVILLA https://t.co/iaBpJZCq2s
— Copyright Plaza (@CopyrightPlaza1) August 4, 2024
மஞ்சுமெல் பாய்ஸ் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றதால் தனக்கு 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் கேட்கப் பட்டுள்ளது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ரூ.60 லட்சம் இழப்பீடாக தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. இப்படம் தவிர்த்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படத்தில் தனது பாடலை பயண்படுத்தியதற்காக படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா விவகாரம் தவிர்த்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது சிராஜ் என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். தன்னை பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.7 கோடி வாங்கிய தயாரிப்பாளர்கள், அதனுடன் திரைப்படத்தின் லாப பங்குத்தொகையையும் தருவதாக சொல்லி விட்டு தரவில்லை என சிராஜ் குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் செளபின் சாஹிர் , பாபு சாஹிர் உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை தொடர்ந்து வருகிறது.
மேலும் படிக்க : Ram Gopal Varma: படம் ஓடவே இல்ல; சொந்த பணத்தை போட்டு திரையரங்கில் ஓட வைத்தார்: ராம் கோபால் வர்மா சொல்லும் நடிகர் யார்?