மேலும் அறிய

Actor Vadivelu Movie : வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார்.

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Actor Vadivelu Movie : வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தொடங்கின. வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

Actor Vadivelu Movie : வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்துக்கொள்ள படக்குழுவினர் விரும்பினர். இதனை ஏற்றுக்கொண்ட லைகா நிறுவனம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினர். இதன்போது படத்தின் தயாரிப்பாளரும் , தொழிலதிபருமான லைகா குழும  உரிமையாளர் சுபாஷ்கரன், அந்நிறுவனத்தின் துணை தலைவர் பிரேம், அந்நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம். தமிழ்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Actor Vadivelu Movie : வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

'வைகைப்புயல்' வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிப்பதாலும்,  அவர் இந்த படத்தில் பாடுவதாலும் லண்டனில் நடைபெற்று வரும் படத்திற்கான இசையமைப்பு பணி கவனம் பெற்றிருக்கிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான 'பாரிஸ் ஜெயராஜ்', 'கர்ணன்', 'ஜகமே தந்திரம்', 'சார்பட்டா பரம்பரை' ஆகிய படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால், அவரின் இசையில் உருவாகிவரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் பாடலுக்கும் அதிகளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : Bigg Boss Tamil 5 winner: அன்றே கணித்தாரா தாமரை...? பிக்பாஸ் 5 டைட்டைல் வின்னர் இவர்தான்...?

மேலும் படிக்க : Maanadu 50th Day : மாநாடு 50 நாட்கள் ஓடியது 100 நாட்கள் ஓடியதற்கு சமம்...! தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி மகிழ்ச்சி..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?

Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி

Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்

Coolie Box Office: ரூ.400 கோடியை கடந்த கூலி.. இந்தியாவில் எத்தனை கோடி? தமிழில் எத்தனை கோடி வசூல்?

ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி
Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
Coolie Box Office: ரூ.400 கோடியை கடந்த கூலி.. இந்தியாவில் எத்தனை கோடி? தமிழில் எத்தனை கோடி வசூல்?
Coolie Box Office: ரூ.400 கோடியை கடந்த கூலி.. இந்தியாவில் எத்தனை கோடி? தமிழில் எத்தனை கோடி வசூல்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?

Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?

‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!

IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!

Embed widget