Imsai Arasan 23 Pulikesi: சிரிக்க வைத்த கதை.. சிந்திக்க வைத்த திரைக்கதை.. ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ வெளியாகி 17 ஆண்டுகளாச்சு..
தனது நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகர் வடிவேலு ஹீரோவாக அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தனது நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகர் வடிவேலு ஹீரோவாக அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
எண்ணற்ற சிறப்புகளைக் கொண்ட படம்
சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து வந்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட படம், கார்ட்டூனிஸ்ட் ஆக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னாளில் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கிய சிம்பு தேவனின் அறிமுகப்படம், வடிவேலு ஹீரோவாக அறிமுகமான படம் நான் என்னத்த சிறப்புகளை கொண்டு தற்கால அரசியலை புகுத்திப் பார்க்கும் வண்ணம் அழகாக ரசிகர்களுக்கு விருந்தளித்தது இம்சை அரசன் 23ம் புலிகேசி. இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் வடிவேலு நடித்திருந்தார். மேலும் மோனிகா,தேஜாஸ்ரீ, நாசர் நாகேஷ் மனோரமா வெண்ணிறாடை மூர்த்தி சிஐடி சகுந்தலா சுமன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். சபேஷ் முரளி படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ஆரம்பம் முதல் இறுதி வரை
இம்சை அரசன் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை தனது திரைக்கதை மேஜிக்கால் அதகளம் பண்ணியிருப்பார் சிம்புதேவன். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் விதம், புலிகேசியாக வடிவேலு அறிமுகமாகும் காட்சி என நொடிக்கு நொடி சிரிப்பு சரவெடிகளை கொளுத்தி போட்டிருந்தார். படத்திற்கு பெரும் பலமாக வசனங்கள் அமைந்தது. சாதிச்சண்டை மைதானம், வெளிநாட்டு பானங்களுக்கு அனுமதி அளிப்பது, வெளிநாட்டு வளர்ச்சிக்கு பங்களிப்பது, நிஜ உடலை மறைத்துக் கட்டுக்கோப்பான உடலமைப்பை வரைவது, ஒரு மங்குனி மன்னன் எப்படியெல்லாம் அயல்நாட்டின் அடிமையாக செயல்படுவான் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டியது இப்படம். இது ரசிகர்களை ஆழ்ந்து சிந்திக்க வைக்கவும் செய்தது.
அரசு ஊழியர்களின் சோம்பேறித்தனம், மக்களாட்சியில் தொடரும் பிரச்சினைகள், எதிர்த்து கேள்வி கேட்கும் கம்யூனிஸ்ட்டுகள் என படம் முழுக்க சிம்புதேவன் கலக்கியிருப்பார். ஒருபக்கம் புலிகேசி, இன்னொரு பக்கம் உத்தமப்புத்திரன் என இரட்டை வேடங்களில் தான் என்றும் ஹீரோ தான் என வடிவேலு உணர்த்தியிருப்பார்.
சுயநலம் மிக்க மாமனாக நாசர், அவருக்கு துணைபோகும் அமைச்சராக இளவரசு, , அரண்மனை ஆயுதங்களைத் தயாரிப்பவராக மனோபாலா, எதிரிநாட்டு மன்னனாக தியாகு, ஒற்றனாக முத்துக்காளை, புலவராக சிங்கமுத்து என அனைவரும் ஓரிரு காட்சியில் வந்தாலும் அசால்ட்டாக விளையாடியிருப்பர்.
இந்த படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஒரு படத்தின் வெற்றி காலத்துக்கும் அப்படம் பேசப்படுவதில் தான் இருக்கிறது. அப்படி சமகால அரசியலை என்றைக்கு இம்சை அரசன் படத்தோடு பொருத்தி பார்த்தால் தமிழ் சினிமா வரலாற்றில் இப்படம் எவ்வளவு முக்கியமானது என்பது புரியும்.
இம்சை அரசன் 24ம் புலிகேசி
இந்த படத்தின் அடுத்த பாகமாக ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் மிகவும் கோலகலமாக தொடங்கியது. ஆனால் பல பிரச்சினைகளால் அப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.