மேலும் அறிய

Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?

சூர்யா நடிப்பில் வெளியாகிய கங்குவா படம் முதல் 3 நாளில் ரூபாய் 127 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியான படம் கங்குவா. ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தை சிவா இயக்கியுள்ளார்.

கங்குவா கலெக்‌ஷன்ஸ்:

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படம் வெளியான தினத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. ஆனால், வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

கலவையான விமர்சனங்கள் படத்திற்கு வந்தாலும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் 3 நாள் வசூல் ரூபாய் 127 கோடியே 64 லட்சம் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

1000 கோடி அவ்வளவுதான்:

படம் முதல் நாள் எதிர்பார்த்த அளவு வசூலை குவிக்காவிட்டாலும் வெள்ளி, சனிக்கிழமைகளில் வசூலை வாரிக்குவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வசூலையும் சேர்த்தால் படம் ரூபாய் 200 கோடி வரை வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குவா படம் 1000 கோடி ரூபாய் வரை வசூலை  குவிக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிய நிலையில், கலவையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு கங்குவா படம் திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடினால் மட்டுமே படம் பட்ஜெட்டை விட அதிக வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியது போல ரூபாய் படத்தின் ஓடிடி விற்பனை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை சேர்த்தாலும் 1000 கோடி வசூல் என்பது தற்போதைய நிலவரப்படி சாத்தியமே இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
Embed widget