(Source: Poll of Polls)
Suriya Emotional Speech: ஒரு பெண் இங்க ஜெயிக்கறது கஷ்டம்... என் தங்கச்சிங்க என்ன சொன்னாங்கனா... விருமன் சக்சஸ் மீட்டில் சூர்யா நெகிழ்ச்சி!
”ஒரு ஆண் இங்கே ஜெயிப்பது ஈசி. ஆனால் பெண் ஜெயிக்க அதேபோல் 10 மடங்கு அவர்கள் கஷ்டப்பட வேண்டும். வீட்டிலிருக்கும் ஆண் மகனை முன்னால் நிறுத்திவிட்டு அவர்கள் திரை மறைவில் இருந்து தியாகம் செய்கிறார்கள்”
சூர்யா தயாரிப்பில், கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள விருமன் படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான நிலையில், கடந்த நான்கு நாள்களாக இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதுவரை 30 கோடி ரூபாய்க்கும் மேல் இப்படம் வசூலை அள்ளியுள்ள நிலையில், இன்று (ஆக.16) இப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்று முடிந்தது.
2டி ஊழியர்களுக்கு பாராட்டு
இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று, கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா சக்சஸ் மீட் விழாவில் முன்னதாக உணர்வுப்பூர்வமாகப் பேசியுள்ளார்.
”இந்தப் படம் கோவிட் நேரத்தில் படமாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் தடை இல்லாமல் ஷூட்டிங் நடத்தியதில் டெக்னீஷியன்கள், நடிகர், இயக்குநர் தாண்டி திரைக்குப் பின் பலர் இருக்கிறார்கள்.
வீட்டுக்கு போகாமல் அங்கேயே இருந்து அவர்களும் ஷுட்டிங் பார்த்தனர். இயக்குநருக்கு இணையாக இந்தப் படத்தின் ப்ரொடக்ஷனில் 2டியிலிருந்து பலர் உழைத்ததால் தான் இந்த அளவுக்கு படம் மக்களிடம் சென்றடைந்தது.
இவர்கள் இல்லாமல் படம் இந்த அளவு வெற்றி பெற்றிருக்காது, தங்கு தடையின்றி படப்பிடிப்பு நடந்திருக்காது.
’தியாகம் செய்யும் பெண்கள்'
தனியே இங்கு யாரும் ஜெயிக்க முடியாது. குடும்பங்கள் விட்டுக் கொடுப்பதால் தான் எங்களால் வெளியே வந்து வேலை செய்ய முடிகிறது. அவர்கள் எடுத்துக் கொள்ளும் பாரத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அம்மா, குழந்தை, மனைவி முதல், குடும்பத்திலிருக்கும் பெண்கள் தரும் ஆதரவு தான் இதற்கு காரணம்.
ஒரு ஆண் இங்கே ஜெயிப்பது ஈசி. ஆனால் பெண் ஜெயிக்க அதேபோல் 10 மடங்கு அவர்கள் கஷ்டப்பட வேண்டும். நிறைய விஷயங்களை அவர்கள் தியாகம் செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் ஆண் மகனை முன்னால் நிறுத்திவிட்டு அவர்கள் திரை மறைவில் இருந்து தியாகம் செய்கிறார்கள்.
தங்கச்சிங்க சொன்னது...
• @Suriya_offl Anna & @Karthi_Offl Anna Arrives Together For #Viruman Success Function!!@rajsekarpandian @2D_ENTPVTLTD #EtharkkumThunindhavan #Vanangaan #VaadiVaasal pic.twitter.com/4TMXAi6cEK
— MaduraiSFC (@MaduraiSfc) August 16, 2022
இங்கு இதை சொல்ல ஆசைப்படுகிறேன். என் தங்கைகள் பிருந்தா, செல்வி இருவரும் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் சாப்பிட்ட தட்டை மற்ற குடும்பத்தினர் கழுவுவது தான் எங்களுக்கு சொர்க்கம் என சொன்னார்கள். அவர்கள் வாழ்க்கையில் தினசரி அவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
இதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்ந்தால் நம் வாழ்க்கை அழகாக இருக்கும்” என சூர்யா உணர்வுப்பூர்வமாகப் பேசியுள்ளார்.
முன்னதாக தாரை தப்பட்டை முழங்க நடிகர் கார்த்தியும் சூர்யாவும் விழாவுக்கு வருகை தரும் காட்சிகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகின. குறிப்பாக சூர்யா வித்தியாசமான கெட் அப்பில் இவ்விழாவுக்கு வந்தது அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்