Vijay: சீனியர் அஞ்சலி மீது விஜய்க்கு க்ரஷ்... போலீசில் மாட்டிய கதை! - சுவாரஸ்ய அனுபவங்கள்!
நடிகர் விஜய் விஸ்காம் படித்தார், காலேஜ் கட் அடித்தார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று; விஜய்யின் காலேஜ் க்ரஷ், அவர் போலீஸில் மாட்டிய கதைகள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வாங்க பார்க்கலாம்!
தமிழ் திரையுலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் நடிகர் விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிப்பில், இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘வாரிசு’ . இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா என நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டர் திரைப்படம் ஒன்றில் நடிகர் விஜய் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த திரைப்படம் தளபதி 67 என குறிப்பிடப்பட்டு வரும் நிலையில், திரைப்படத்தின் பூஜையும் சமீபத்தில் நடந்தது. வாரிசு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகே, தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார்.
ஆன் ஸ்கிரீனில் மட்டுமின்றி நடிகர் விஜய்யின் ஆப் ஸ்கிரீன் விஷயங்களும் அதிகம் கவனம்பெறும். அந்த வகையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத், விஜய் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். நடிகர்கள் விஜய், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் பால்ய கால நண்பர்கள் என்பதும் இன்றும் அவர்களது நட்பு தொடர்ந்து வருகிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. நடிகர் விஜய்யின் காலேஜ் க்ரஷ், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் அவர் போலீஸில் மாட்டிய கதைகள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வாங்க பார்க்கலாம்!
லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தார் நடிகர் விஜய். அப்போது அவரது க்ரஷ் அஞ்சலி. அஞ்சலி விஜய்யின் காலேஜ் சீனியர். ஒருமுறை அஞ்சலி ஸ்ரீநாத் மற்றும் சிலரை அழைத்து ராக் செய்துள்ளார். அப்போது என்னை ராக் செய்யாமாட்டார்களா என கேட்பாராம் விஜய். பின் அவரிடம் நல்ல நட்புடன் பேசி பழகியுள்ளனர்.
விஜய் தினமும் கல்லூரிக்கு காரில் தான் வருவாராம். ஒருமுறை நண்பர் ஸ்ரீநாத்தும் விஜய்யும் ஸ்ரீநாத்தின் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் போலீஸ் இருந்துள்ளனர். இருவரிடமும் லைசென்ஸ் இல்லாத பயத்தில் விஜய்யிடம் ஸ்ரீநாத் அழுத்து, அழுத்து, அழுத்து என கூற, சரியாக போலீஸ் முன்பு பிரேக்கை அழுத்தி பைக்கை நிறுத்திவிட்டாராம். கேட்டால், நீதானடா அழுத்து என சொன்ன? என கேட்டாராம் விஜய். அதற்கு ஸ்ரீநாத், நான் அழுத்த சொன்னது ஆக்ஸிலேட்டரைத் தான் என கூறியுள்ளார். பிறகு போலீஸிடம் விஜய்யின் தந்தை பெயரை கூறி தப்பித்துள்ளனர்.
விஜய், ஸ்ரீநாத், சஞ்சீவ் ஆகியோரின் நட்பு தோன்றிய இடம் லயோலா கல்லூரி தானாம். முதலில் வைக்கப்பட்ட நுழைவுத் தேர்வை மிஸ் செய்த நிலையில் ரீ டெஸ்ட் எழுத வந்து சந்தித்தவர்கள் தான் ஸ்ரீநாத் மற்றும் விஜய். முதல் நாளிலே இருவரும் தேர்வில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள நண்பர்களாகி விட்டார்களாம். சஞ்சீவ் ஸ்ரீநாத்தின் பள்ளி தோழராம். கல்லூரி தொடங்கிய பின் ஆரம்பித்தது மூவரின் கூட்டணி. இவர்கள் அதிக நேரம் இருந்த இடம் என்றால் அது கார் பார்க்கிங் மற்றும் கேன்டீன் தானாம். அன்று தொடங்கிய இவர்களின் நட்பு இன்று வரை அதே போல் தொடர்ந்து வருகிறதாம். இவர்களின் நட்பு 25 ஆண்டை எட்டியதற்காக கடந்த ஆண்டு கேக் வெட்டி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.