மேலும் அறிய
Watch Video : குட்டி சிவகார்த்திகேயனுக்கு பெயர் வைச்சாச்சு... என்ன பெயர் தெரியுமா? வைரலாகும் வீடியோ
Watch Video : நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவதாக பிறந்த மகனின் பெயர் சூட்டும் விழா இன்று நடைபெற்றது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அன்று சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் பின்னாளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக முன்னேறுவார் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
போட்டியாளராக இருந்து தொகுப்பாளர், துணை நடிகர், ஹீரோ, பாடகர், தயாரிப்பாளர் என படிப்படியாக முன்னேறி இன்று சிவகார்த்திகேயன் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளார் என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் அவரின் கடினமான உழைப்பு, தனித்துமான திறமை மற்றும் விடாமுயற்சி தான்.
வெள்ளித்திரையில் கால் பதிப்பதற்கு முன்னரே தன்னுடைய மாமன் மகள் ஆரத்தியை திருமணம் செய்து கொண்டார். அந்த அழகான தம்பதியினரின் மகள் ஆராதனா ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர். சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த 'கனா' படத்தில் இடம் பெற்ற "யார் இந்த தேவதை..." பாடலின் முதல் வரிகளை பாடி பிரபலமானவர்.
Aaradhana - Gugan - PAVAN ❤️❤️❤️ pic.twitter.com/T0YNorVIQb
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 15, 2024
இரண்டாவதாக சிவகார்த்திகேயன் - ஆரத்தி தம்பதிக்கு சில வருடங்களுக்கு முன்னர் குகன் என்ற ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இந்த தம்பதியருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் சூட்டும் விழாவை இன்று அவருடைய இல்லத்தில் நடத்தி உள்ளார்.
உறவினர்கள் சூழ பூஜையுடன் குழந்தையை தொட்டிலில்போடும் விழாவும் பெயர் சூட்டும் விழாவும் நடந்தேறியுள்ளது. சிவகார்த்திகேயன் - ஆரத்தி தம்பதி தங்களுடைய மூன்றாவது மகனுக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்து மகனுக்கு பெயர் சூட்டிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் கமெண்ட்ஸ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion