Actor Simbu: மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் சிம்பு? 'பத்து தல'க்கு பிறகு ஆரம்பிக்கப்போகுது ஆட்டம்..?
இறுதியாக 2006ஆம் ஆண்டு ரீமா சென், நயன்தாரா, சந்தியா இவர்களுடன் தான் இணைந்து நடித்த வல்லவன் படத்தை சிம்பு இயக்கியிருந்தார்.
![Actor Simbu: மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் சிம்பு? 'பத்து தல'க்கு பிறகு ஆரம்பிக்கப்போகுது ஆட்டம்..? Actor Simbu is about to direct his next movie after Pathu Thala film sources Actor Simbu: மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் சிம்பு? 'பத்து தல'க்கு பிறகு ஆரம்பிக்கப்போகுது ஆட்டம்..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/26/0f815e15a43adb455e57e08ada7ee77d1677405009914574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் சிம்புவின் அடுத்த படமான பத்து தல வரும் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 2017ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் ஹிட் அடித்த மஃப்டி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள 'பத்து தல’ படத்தில் நடிகர் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவில் அறிவிப்பு
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 18ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவின் போது சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் இயக்குநர் அவதாரம்?
மேலும் சிம்புவின் அடுத்த படம் அவர் இயக்கும் படமாக அமையும் என்றும், இந்தப் படத்தில் சிம்பு கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக 2006ஆம் ஆண்டு ரீமா சென், நயன்தாரா, சந்தியா இவர்களுடன் தான் இணைந்து நடித்த வல்லவன் படத்தை சிம்பு இயக்கியிருந்தார். அதன் பின் அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் சிம்பு படம் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் - சிம்பு காம்போ
முன்னதாக பத்து தல படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் பாடம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடி இசையமைத்துள்ள இந்தப் பாடல் பிப்.03ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலானது.
முன்னதாக சிம்பு - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் அமைந்த விண்ணைத் தாண்டி வருவாயா, வெந்து தணிந்தது பட பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், பத்து தல பட ஆல்பத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மேலும், தொட்டி ஜெயா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சிம்பு பத்து தல படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிம்புவுக்கு அவரது பெற்றோர் பெண்பார்த்து விட்டதாகவும், இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஒருவர் சிம்புவுக்கு நிச்சயிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில், நேற்று இதற்கு சிம்பு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: Manu James Passes Away : அதிர்ச்சி.. விரைவில் வெளியாக இருந்த முதல் கனவு திரைப்படம்... படம் வெளியாகும் முன்பே மறைந்த அறிமுக இயக்குநர்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)