8 Years of Vaalu: ரசிகர்களை கதற விட்ட சிம்பு.. ரிலீசுக்கு கைகொடுத்த விஜய்.. 8 ஆண்டுகளை நிறைவு செய்த ‘வாலு’ படம்..!
நடிகர் சிம்பு நடிப்பில் பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு ஒரு வழியாக ரிலீசான வாலு படம் இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
நடிகர் சிம்பு நடிப்பில் பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு ஒரு வழியாக ரிலீசான வாலு படம் இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ரசிகர்களை கதற விட்ட சிம்பு
தமிழ் சினிமாவின் மறைந்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சிம்புவை வைத்து, வேட்டை மன்னன் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே படம் கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதே தயாரிப்பாளரை கொண்டு சிம்பு ‘வாலு’ என்கிற படத்தில் நடிப்பதாக அறிவித்தார். அறிமுகம் இயக்குனராக விஜய் சந்தர் இயக்கிய இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, சந்தானம், விடிவி கணேஷ் ஆடுகளம் நரேன் ஸ்ரீரஞ்சனி ஆதித்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமன் இசையமைத்த இப்படம் சிம்பு எப்படி பட்டவர் என்பதை வெளிக்காட்டும் விதத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகாலம் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வெளியானது.
படத்தின் கதை
அன்பான குடும்பம் பாசத்தை அதிகமாக கொட்டும் நண்பர்கள் என வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் சிம்பு ஹன்சிகாவை பார்த்ததும் காதலில் விழுகிறார் அவர் தன் காதலை வெளிப்படுத்த போகும் இடத்தில் ஏற்கனவே முறை மாமனுக்கு நிச்சயிக்கப்பட்டவர் என தெரிய வருகிறது அந்த முறை மாமனும் வட்டி தொழில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் தாதாவாக வருகிறார் இருந்தாலும் 10 நாட்களில் அன்சிகாவை காதலில் விழுது வைக்கிறேன் என சபதம் எடுத்து சிம்பு செய்யும் வேலைகள் தான் இப்படத்தின் கதை ஆகும். முன்னதாக படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட படம்
இந்த படத்தின் அறிவிப்பு 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. அதே ஆண்டில் தீபாவளிக்கு படம் வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிட்ட 4 ஆண்டுகளுக்கு மேலாக மெதுவாக உருவாகி வந்த சிம்புவின் ‘போடா போடி’ படம் வெளியானதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் பண்டிகை நாட்கள் ரிலீஸ் தேதியாக குறிக்கப்பட்ட நிலையில், வழக்கம்போல ஷூட்டிங் முடியாமல் இருந்தது. அப்படியே 2014 பொங்கல், மே தினம், தீபாவளி, கிறிஸ்துமஸ் என ரிலீஸ் தேதி உறுதியானாலும் படம் முடிந்தபாடில்லை.
இதனால் ரசிகர்கள் வாலு படம் வருமா என நொந்து விட்டனர். ஒரு வழியாக யு சான்றிதழ் வழங்கிய பிறகு படம் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டாலும், தடங்கல்கள் ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சிலம்பரசனின் தந்தை டி. ராஜேந்தர்படத்தின் விநியோக உரிமையை எஸ்.எஸ்.சக்ரவர்த்தியிடம் இருந்து வாங்கி தனது சொந்த சிம்பு சினி ஆர்ட்ஸ் பேனரில் வெளியிட்டார். இப்படியான நேரத்தில் ஜூலை 17 ஆம் தேதி வாலு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் மீண்டும் தள்ளிப்போனது. பின்னர் நடிகர் விஜய் செய்த உதவியால் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ரீலிஸானது.
சிம்புவின் சோதனை காலம்
இந்த படத்தில் நடிக்கும்போது, நடிகை ஹன்சிகாவுடன் காதலில் விழுந்தார் சிலம்பரசன். ஆனால் இந்த காதல் ஒரு மாதம் கூட முழுவதுமாக நீடிக்கவில்லை. அதேசமயம் சிம்பு ஷூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை, படம் ரிலீஸாக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என ஏகப்பட புகார்கள் இந்த காலக்கட்டத்தில் தான் வர தொடங்கியது. நிஜத்தில் அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, இந்த படத்தில் விஜய் செய்த உதவியால் அவரை பல இடங்களில் நன்றியுடன் நினைவுக் கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.