Simbu: மணிரத்னம் மேல பயம் இல்ல.. நான் ஷுட்டிங் போகமாட்டேனா? சிம்பு பரபரப்பு பேச்சு
மணிரத்னம் மீது பயம் இல்லை என்றும் மணிரத்னத்திற்கு என்ன வேண்டும் என்று தெரியும் என்றும் நடிகர் சிம்பு பேசியுள்ளார்.

கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடிக்கும் தக்லைஃப் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 5ம் தேதி ரிலீசாகிறது.
மணிரத்னம் மேல பயமா?
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு நேற்று பேசியதாவது, என்னை நிறைய பேரு கேட்ட ஒரு கேள்வி என்னவென்றால், மணி சார் படப்பிடிப்பு என்றால் நீங்கள் சரியாக போய்விடுகிறீர்களே? அது எப்படி? அவரு ரொம்ப ஸ்ட்ரிக்டா? என்று கேட்கிறார்கள். அவரு மேல பயமா? அப்படினு கேக்குறாங்க.
சத்தியமா அவரு மேல பயம் எல்லாம் கிடையாது. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவரு படத்துக்கு ஒருநாள் கூட நான் தாமதமாக போனதே இல்லை. சில நாள் அவருக்கு முன்னாடியே நான் போயிருக்கேன். அதுக்கு காரணம் நாம ஒரு நடிகர்.
மணிரத்னத்திற்கு தெரியும்:
ஒரு தயாரிப்பாளரையோ, ஒரு இயக்குனரையோ நம்பி நடிக்கப்போறோம் அப்படினு சொன்னா, சொன்ன டைம்ல டைரக்ரடர் படப்பிடிப்புக்கு வரனும், சொன்ன டைம்க்கு டைரக்டர் படத்தை எடுக்கனும், டைரக்டர் டைம்க்கு வரனும், அப்போதான் மத்த ஆக்டர்கள்தான் டைம்க்கு வருவாங்க.
அதேமாதிரி ஒரு கதையை சொல்றோம்னு சொன்னா ஸ்பாட்டுக்கு வந்த பிறகு இதை எப்படி எடுக்கலாமா? அப்படி எடுக்கலாமா? இப்படி பண்ணிருக்கலாமா? அப்படி பண்ணிருக்கலாமா?னு பண்ணமாட்டாரு. அவருக்கு தெரியும். என்ன எடுக்கனும், எப்படி எடுக்கனும்னு.
நேரம்:
சொன்ன டைம்ல படத்தை முடிக்கனும். ஒரு ஆக்டரோட டைமை வேஸ்ட் பண்ணமாட்டாரு. கால்ஷீட் வேஸ்ட் பண்ணமாட்டாரு. சொன்ன டைம்ல படம் கரெக்டா வரும். சம்பளம் கரெக்டா வரும். படம் சரியா ரிலீஸ் ஆகும். இவ்வளவும் ஒரு மனுஷன் இத்தனையும் பின்பற்றும்போது யாருதான் வர மாட்டாங்க?
அதேமாதிரி ஒரு நடிகர்கிட்ட கரெக்ஷன் சொன்னோம்னா, சில இயக்குனர்கள் மானிட்டர்கிட்ட உட்கார்ந்து இப்படி பண்ணுங்க. அப்படி பண்ணுங்கனு சொல்வாங்க. ஆனா மணி சார் எவ்வளவு தூரத்துல இருந்தாலும் எந்திரிச்சு வந்து இப்படி வேணும்னு சொல்லுவார்.
நான் படப்பிடிப்புக்கு போகமாட்டேனா?
எனக்கு மணி சார் மாதிரி டைரக்டர் கிடைச்சு இருந்தா என் ஃபேன்ஸ் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாரு. நிறைய படங்கள் வந்துருக்கும். மக்கள் நான் படப்பிடிப்பிற்கு போக மாட்டேங்குறேனு நினைக்குறாங்க. எனக்கு சினிமாவைத் தவிர வேற என்ன தெரியும்? பிறந்தது இருந்து எனக்கு அதான் தெரியும். நான் சினிமாவை நான் காதலிக்குறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலரும் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை என்று பல முறை குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக இவரது படங்கள் சில ஆண்டுகள் ரிலீசாகாமல் இருந்தது. ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மணிரத்னம் போல தனக்கு இயக்குனர்கள் கிடைத்திருந்தால் தனக்கு நிறைய படம் கிடைத்திருக்கும், என் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்று கூறியிருப்பது அவரை வைத்து படம் இயக்கிய பல இயக்குனர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















