மேலும் அறிய

SilambarasanTR: திருமணம் செய்ய பயமாக உள்ளது.. காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த சிம்பு

இதுவரை ஜாலியான படங்களில் நடித்து வந்த நான் முதன்முதலாக நிஜ வாழ்க்கையை பதிவு செய்யும் சீரியஸான படத்தில் நடித்துள்ளேன். இது பொழுதுப்போக்கு , சென்டிமென்ட், ஆக்‌ஷன் என அனைத்தும் கலந்து இருக்கும்.

தான் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்ற காரணத்தை நடிகர் சிலம்பரசன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுதொடர்பான பேட்டி ஒன்றில் தான் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்ற காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் இதுவரை ஜாலியான படங்களில் நடித்து வந்த நான் முதன்முதலாக நிஜ வாழ்க்கையை பதிவு செய்யும் சீரியஸான படத்தில் நடித்துள்ளேன். இது பொழுதுப்போக்கு , சென்டிமென்ட், ஆக்‌ஷன் என அனைத்தும் கலந்து இருக்கும். இப்படி ஒரு படத்தின் நான் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்த நிலையில் அதனை ரசிகர்கள் வரவேற்பார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். 

19 வயது சிறுவன், இளைஞர், நடுத்தர வயது என 3 விதமான தோற்றத்தில் நடித்துள்ளேன். நான் இன்னும் நடிகனாக நடிப்பு பசியோடு காத்திருக்கிறேன். ஆன்மீகத்தில் கவனம் செலுத்துகிறேன். வயதின் காரணமாக முதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  மேலும் எனது திருமணம் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது. அவரை காதலிக்கிறேன், இவரை காதலிக்கிறேன் என பரப்புகிறார்கள். 19 வயதில் இருந்தே இதுபோன்ற விஷமத்தனமான பிரசாரங்களை தாண்டி வந்துள்ளேன். 

View this post on Instagram
 
A post shared by Red Giant Movies (@redgiantmovies_)

தனது மகனை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவது போல என  தாயும், தந்தையும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் எனக்குத்தான் பயமாக உள்ளது. காரணம் அவசரக்கோலத்தில் திருமணம் செய்து, அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை, விவாகரத்து என பிரச்சினைகள் வரக்கூடாது என்ற பயத்தில் தான் அதனை தள்ளிப்போடுகிறேன். எனக்கான துணை வரும் வரை காத்திருக்கிறேன் என சிம்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆரம்ப காலக்கட்டத்தில் நயன்தாரா, ஹன்சிகாவுடன் காதலில் இருந்த சிம்பு அந்த பிரிவுக்குப் பின் சினிமாவில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சிம்பு மீண்டும் எடை குறைப்பில் ஈடுபட்டு படங்களில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். இதற்கிடையில் கடைசியாக நடிகை நிதி அகர்வாலை அவர் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Embed widget