மேலும் அறிய

Silambarasan : தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் சிம்பு! வைரலாகும் STR கெட்டப்!

தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்பு ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது

சிலம்பரசன்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகர் சிம்பு தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்துள்ளார். தொடர் தோல்விகளோ , தனிப்பட்ட பிரச்சனைகள் பல இருந்தும் அவற்றை எதிர்கொண்டு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் மாஸான கம்பேக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படம் அவருக்கு இன்னொரு வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தபடியாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கவிருந்த எஸ்.டி.ஆர் 48 படத்தில் நடிக்க இருந்தார். இரண்டு வேடங்களில் இப்படத்தில் சிம்பு நடிக்க இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில் தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவரை தேடி வந்தது. 

தக் லைஃப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிக்க இருந்தார்கள். படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தப் படத்தில் இருந்து இரண்டு நடிகர்களும் விலகினர். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் மற்றும் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சிலம்பரனும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்கள். இப்படத்தில் சிம்பு நடிகர் கமல்ஹாசனின் மகனாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த மாதம் வெளியிட்டது படக்குழு. முதற்கட்டமாக தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சைபீரியாவில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக தக் லைஃப் படத்தில் சிம்புவின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. மொத்தம் 17 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரின் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இந்த ஆண்டிற்குள் இப்படத்தை திரையரங்கில் வெளிட படக்குழு திட்டமிட்டுள்ளதால்  படப்பிடிப்பை துரிதப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையைத் தொடர்ந்து அடுத்து டெல்லிக்கு செல்ல இருக்கிறது படக்குழு.

படப்பிடிப்பு தளத்தில் சிம்பு

தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்பு தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பை முடித்து சிலம்பரசன் எஸ்.டி.ஆர் 48 படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்க : Nazath: "3 வருடமா சும்மா இருக்கேன்" நண்பரை நம்பி ஏமாந்த “அப்பா” நசாத் - என்ன நடந்தது?

23 years of Aanandham : அண்ணன் - தம்பி பாசம் என்னனு தெரியுமா? ஆனந்தம் படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
Breaking News LIVE: ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு
Breaking News LIVE: ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Nellaiappar Temple Song  : நெல்லையப்பருக்கு பிரத்யேக பாடல்!உற்சாகத்தில் பக்தர்கள்Senji Masthan : மஸ்தானுக்கு டம்மி பதவி? ஓரங்கட்டுகிறதா திமுக?Kanimozhi : குவைத் விபத்தில் இளைஞர் மரணம்!கனிமொழி நேரில் நிவாரணம்’’அழாதீங்க மா’Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
Breaking News LIVE: ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு
Breaking News LIVE: ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Watch Video: மனைவி முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சீண்டிய ரசிகர்.. பாய்ந்து அடிக்க ஓடியதால் பரபரப்பு..!
மனைவி முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சீண்டிய ரசிகர்.. பாய்ந்து அடிக்க ஓடியதால் பரபரப்பு..!
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
T20 World Cup 2026: இந்தியா, அமெரிக்கா உட்பட இந்த 12 அணிகள்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி..!
இந்தியா, அமெரிக்கா உட்பட இந்த 12 அணிகள்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி..!
Embed widget