Varisu BTS video : தீ தளபதி! பேர கேட்டு விசிலடி... வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டின் பிடிஎஸ் வீடியோவை பகிர்ந்த ஷாம்!
நடிகர் விஜய்யுடன் திரையை பகிர்ந்த நடிகர் ஷாம் வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற சமயத்தில் எடுத்துக் கொண்ட பிடிஎஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார்.
பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ஷாம் பகிர்ந்த பிடிஎஸ் வீடியோ :
வாரிசு திரைப்படத்தில் நடிகர் ஷாம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் விஜய்யுடன் திரையை பகிர்ந்த நடிகர் ஷாம் வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற சமயத்தில் எடுத்துக் கொண்ட பிடிஎஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் நடிகர் விஜய் எலக்ட்ரிக் வண்டியை ஓட்ட அருகில் ஷாம் அமர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் தீ தளபதி பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. அதனுடன் வாரிசு படம் 7 நாட்களில் 210 கோடி வசூலித்ததையும் குறிப்பிட்டள்ளார்.
View this post on Instagram
உலகளவில் துணிவை மிஞ்சிய வாரிசு :
படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியிருந்தது.
View this post on Instagram
வாரிசு படம் வெளியான நாளில் இருந்து வசூல் செய்யும் விவரங்களை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளிட்டு வருகிறது. அந்த வகையில் 7ம் நாளான இன்று வாரிசு திரைப்படம் 210 கோடி வசூலித்துள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படத்துடன் நேரடியாக களத்தில் இறங்கிய வாரிசு திரைப்படம் முதல் மூன்று நாட்கள் வரை துணிவு திரைப்படத்தை விடவும் பாக்ஸ் ஆபிஸில் சற்று குறைவாகவே வசூலித்து வந்தது. தமிழ்நாட்டில் வாரிசு படத்தின் வசூல் துணிவு திரைப்படத்தை விட சற்று குறைவாகவே இருப்பினும் உலகளவில் வாரிசு திரைப்படமே முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.