மேலும் அறிய
Sanjeev Vs Vijay: ”என்னைப்போல் ஏன் நடிக்கிற என திட்டிய விஜய்” - நடிகர் சஞ்சீவ் சொன்ன சீக்ரெட்..
Sanjeev Vs Vijay: “ நீ என்னை மாதிரி நடிச்சிட்டு இருக்க. நான் உன்னை பார்த்து நடிக்கிறேன் என்று என்னை திட்டுவார்கள்” என்ற விஜய்
Sanjeev Vs Vijay: என்னைப்போல் நீ நடிப்பதால் மக்கள் என்னைத்தான் திட்டுவார்கள் என விஜய் கூறியதாக அவரது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
லியோ படத்துக்கு பிறகு, தளபதி 68 என்ற கோட் பத்தில் விஜய் நடித்து வருகிறார். அடுத்ததாக விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் என்ற தனி கட்சியை ஆரம்பித்துள்ளதாகவும் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
தான் அரசியலுக்கு வந்தால் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்று விஜய் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவி, விஜய் பற்றி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நான் விஜய் போல் நடிப்பதாக வரும் கமெண்ட்ஸ்களை பார்த்து வருகிறேன். விஜய் கூட என்னிடம், “நீ என்னை மாதிரி நடிச்சிட்டு இருக்க. நான் வருஷத்துக்கு ஒருமுறை படம் நடிக்கிறேன். அதனால் உன்னை பார்த்து தான் நான் நடிக்கிறேன் என்று என்னை திட்டுவார்கள்” என்றார். நான் வேண்டுமென்றே விஜய்யை போல் நடிக்கவில்லை. எதார்த்தமாக தான் நடிக்கிறேன்” என்றார்.
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் சஞ்சீவி. தொடர்ந்து விஜய் டிவி, ராஜ் டிவி உள்ளிட்ட சேனல்களின் சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற சஞ்சீவி, புதிய கீதை, பத்ரி, மாஸ்டர், யானை, பாலைவன சோலை உள்ளிட்ட படங்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர்களின் கூட்டத்தை பெற்றுள்ளார். இப்படி நடிக்கும்போது சஞ்சீவியின் நடிப்பு விஜய்யின் சாயலை ஒத்து இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.அதனால் தன்னுடைய நடிப்பு குறித்து சஞ்சீவி பேசியுள்ளார்.
விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருந்தாலும், நண்பர்கள் கூட்டம் ரொம்பவே குறைவாக உள்ளது. குறிப்பாக விஜய்யின் நெருங்கிய நண்பர்களாக சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார், மனோகர் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர்கள். இவர்களை அடிக்கடி சந்திப்பதை விஜய் வழக்கமாக கொண்டிருந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விஜய் வலம் வரும் நிலையில், சஞ்சீவ் சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக வலம் வருகிறார். இதேபோல் இவர்களுடன் ஒன்றாக படித்த ஸ்ரீநாத், இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவாவிடம் உதவியாளராக இருந்து வந்ததுடன், நடிகராகவும் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: GOAT Vijay: கோட் படத்தில் சோகம் - துண்டான விஜய் கை விரல்..இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion