கடந்த ஆண்டு விமர்சனங்களுக்குள்ளான படமாக கங்குவா இருந்தது. சூர்யா-சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான இத்திரைப்படத்தின்மீது ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.
ஆனால் திரையில் வெளியான பிறகு கங்குவா ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தவில்லை.
திரையில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லையென்றாலும் கூட, OTT-யில் பார்த்த ரசிகர்கள் அதிகம் பாராட்டியிருந்தனர்.
அவ்வளவு கடுமையான விமர்சனங்கள் செய்யும் அளவு கங்குவா மோசமான படம் இல்லை என்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க தகுதியுடைய படங்களுக்கான லிஸ்ட் வெளிவந்துள்ளது.
அதில் சிறந்த திரைப்படத்திற்கான 207 படங்களில் கங்குவா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.