Watch Video: அடடா.. அஜித்தின் குரல் இப்படி மாறிவிட்டதா? - மிமிக்ரி செய்து அசத்திய காலா நடிகர்.. வைரலாகும் வீடியோ
நடிகர் மணிகண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர்கள் அஜித், ரகுவரன், விஜய் சேதுபதி, கிஷோர் ஆகியோர் மாதிரி மிமிக்ரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் மணிகண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர்கள் அஜித், ரகுவரன், விஜய் சேதுபதி, கிஷோர் ஆகியோர் மாதிரி மிமிக்ரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பண்பலை வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த நடிகர் மணிகண்டன், பீட்சா II: வில்லா படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் படம் மூலம் நடிகராக அறிமுகமான அவர், காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். இதன்பின்னர் 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே, ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதினார். இப்படியான நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா தயாரித்த ஜெய்பீம் படம் வெளியானது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் ராஜா கண்ணு என்னும் கேரக்டரில் நடித்திருந்தார் மணிகண்டன். பார்ப்பவர்களை உலுக்கும் அளவுக்கு காட்சிகள் நிறைந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வானொலி தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர், உதவி இயக்குநர், நடிகர் என பல முகங்களை கொண்ட மணிகண்டன் தற்போது குட் நைட் என்னும் படத்தில் நடித்துள்ளார்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் “முதல் நீ முடிவும் நீ” மீத்தா ரகுநாத் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடிக்க விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் வரும் மே 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. குறட்டையால் ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சினைகள் மையப்படுத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு ப்ரோமோஷன் பணிகளுக்காக படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பங்கேற்ற நடிகர் மணிகண்டன் அஜித், ரகுவரன், விஜய் சேதுபதி, கிஷோர் ஆகியோர் மாதிரி மிமிக்ரி செய்து காட்டினார். வாலி, பில்லா, விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அஜித் குரலையும், பாட்ஷா, முதல்வன், யாரடி நீ மோகினி படத்தில் இடம் பெற்ற ரகுவரன் குரலையும் அச்சு அசலாக மணிகண்டன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
#Manikandan 👏😍pic.twitter.com/EyihNgaCBj
— Karthik Ravivarma (@Karthikravivarm) May 10, 2023