குழந்தைகளுக்கு விபத்து..அதகூட மறைச்சிட்டாங்க...மனைவி ஆர்த்தி பற்றி நடிகர் ரவி மோகன் 4 பக்க அறிக்கை
Ravi Mohan : நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ஜெயம் ரவீ மீது குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில் தற்போது ரவி மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

நடிகர் ரவி மோகன் மனைவியுடன் ஆர்த்தியுடன் விவாகரத்து பெற்று தற்போது பாடகி கெனிஷாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் ரவி மோகன் மற்றும் கெனிஷா தொடர்ச்சியாக ஒன்றாக வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆர்த்தி ரவி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார். தனது குழந்தைகளை விட்டு ரவி மோகன் தனது பொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த அறிக்கை வெளியான பின் ஆர்த்திக்கு நடிகை குஷ்பு , ராதிகா ஆகியோர் ஆதரவு தெரிவித்தார்கள். ரவி மோகனை சமூக வலைதளத்தில் பலர் விமர்சிக்கத் தொடங்கினார்கள். தற்போது ரவி மோகன் அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி அறிக்கை :
எனது நேர்மை கேளிவிக்கு உள்ளாகும்போது நான் பேசிதான் ஆகவேண்டும்
நமது நாடு ஒரு பெரிய கூட்டு நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பொதுச் சமூகத்தில் விவாதப் பொருளாகிறது என்பது வேதனையளிக்கும் விஷயம். இதெல்லாம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இரக்கமே இல்லாமல் எனது தனிப்பட்ட வாழ்க்கை உண்மையே இல்லாமல் திரிக்கப்பட்டு வதந்திகளாக மாறுவதைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. எனது மௌனம் ஒரு பலவீனம் அல்ல - அது ஒரு பிழைப்பிற்கான போராட்டம். ஆனால் எனது பயணத்தையோ அல்லது எனது வடுக்களையோ அறியாதவர்களால் எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படும்போது, நான் பேச வேண்டும்.
உறுதியும் மற்றும் கடின உழைப்பின் மூலம் எனது வாழ்க்கையை உருவாக்கி இருக்கிறேன். என்னுடைய கடந்த திருமண உறவில் இருந்து யாரையும் என்னை வைத்து சீப்பாக சிம்பதியும் புகழும் தேடிக்கொள்ள நான் அனுமதிக்க மட்டேன் . இது எனக்கு ஒரு விளையாட்டு அல்ல. இது எனது வாழ்க்கை, எனது உண்மை மற்றும் எனது குணப்படுத்துதல். சட்ட ரீதியான நடவடிக்கைகள் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்பதை நான் நம்புகிறேன்.
வீட்டில் அடைத்து வைக்கபட்டேன்
பல வருடங்களாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் வதைக்கப்பட்டு , நீதி நெருக்கடியையும் அனுபவித்திருக்கிறேன். இதை சொல்வதற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் என் சொந்த பெற்றோர்களை கூட சந்திக்க அனுமதிக்காமல் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். என்னுடைய திருமணத்தை காப்பாற்ற இத்தனை ஆண்டுகள் போராடி வேறுவழியில்லாமல் அதை விட்டு வெளியே வர் முடிவு செய்திருக்கிறேன். இந்த முடிவு எனக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதனால் இதை நான் கனமான இதயத்துடன் எழுதுகிறேன்.
எல்லாம் திட்டமிட்ட சதி
விவாகரத்து கோரும் எனது முடிவு குறித்து எனது குடும்பத்தினர், எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் என்னைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்ட எனது அன்பான ரசிகர்களிடம் நான் ஏற்கனவே மனம் திறந்து பேசிவிட்டேன். எனது பிரிந்த முன்னாள் மனைவி உட்பட அனைவரின் தனியுரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடன் நான் அந்தத் தேர்வைச் செய்தேன், மேலும் ஊகிக்கவோ அல்லது பழி சுமத்தவோ வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினேன்.
ஆனால் என்னுடைய மெளனம் குற்றவுணர்ச்சியாக கருதப்படுகிறது. சமீபத்திய பொதுத் தோற்றங்களின் அடிப்படையில் என்னை வில்லனாக சித்தரிக்கும் விதமாகவும் என்னுடைய கேரக்டரை கேள்விக்குட்படுத்தும் விதமாகவும் பல தகவல்கள் பரப்பப் படுகின்றன. என்னுடைய குணத்தை மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் என்னுடைய நடத்தைகளைப் பற்றி அவதூறு பரப்பப் படுகின்றன. இந்த குற்றசாட்டுகளை எல்லாம் மறுக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவரை எல்லாம் எனக்கு எதிராக சாயம்பூசப்பட்டவை. என்னுடைய உண்மையின் பக்கம் எப்போதும் உறுதியுடனும் , பெருமையுடனும் , நீதியின் மேல் நம்பிக்கை வைத்து நான் நின்றிருக்கிறேன். இனிமேலும் நிற்பேன்.
குழந்தைகளை விட்டு பிரித்து வைத்திருக்கிறார்கள்
பின்குறிப்பு : (நான் வீட்டை விட்டு வெளியேறத் தேர்ந்தெடுத்த நிமிடத்தில் "ex" என்ற சொல் என் இதயத்தில் உருவாக்கப்பட்டது, அது என் இறுதி மூச்சு வரை அப்படியே இருக்கும்)
" எனக்கு ரொம்பவும் வருத்தமளிப்பது என குழந்தைகள் பண ஆதாயத்திற்காகவும் பொது இரக்கத்திற்காகவும் கருவிகளாக பயண்படுத்தப்படுவது தான். நாங்கள் பிரிந்ததில் இருந்து என்னை என் குழந்தைகளிடம் இருந்து பிரித்து வைத்துள்ளார்கள். ஒரு நீதிமன்ற சந்திப்பை தவிர்த்து என் அவர்களுக்கும் எனக்குமான தொடர்பை சிறப்பாக திட்டமிட்டு துண்டித்தார்கள். என்னை சொந்த குழந்தைகளை நெருங்கவும் அவர்களை பார்ப்பதில் இருந்து தடுக்க அவர்களை சுற்றி பவுன்சர்கள் வைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு தந்தையாக என் பொறுப்பை விமர்சிக்கிறீர்கள். நாங்கள் பிரிந்த ஒரு மாதத்திற்கு பின் என் குழந்தைகள் கார் விபத்தில் சிக்கியது பற்றி ஒரு மூன்றாம் நபர் சொல்லிதான் நான் தெரிந்துகொண்டேன். இன்னும் என் குழந்தைகளை பார்க்க விடவில்லை. அவர்கள் வாழ்க்கை பாதுகாப்பாகவும் , இனிமையாகவும் இருக்க வேண்டும் என்று முழு அன்புடனும் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு தேவையில்லாத கஷ்டங்களை அவர்கள் சுமக்க கூடாது. என்னால் முடிந்த எல்லாவற்றை வைத்து என் முன்னாள் மனைவிக்கு ஆதரவு கொடுத்திருக்கிறேன். ஆனால் இன்று எனக்கு ஏற்பட்டிருக்கும் நிலை எந்த தந்தைக்கும் வரக்கூடாது. ஒரு நாள் என் குழந்தைகளுக்கு உண்மை புரிந்து ஒரு ஆணாக நான் இந்த முடிவை எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தேன் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்." என ரவி மோகன் தெரிவித்துள்ளார்.





















