மனைவியை பிரிந்தாலும் பிரிக்க முடியாத பாசம்.. மகன்களுடன் இருக்கும் ரவி மோகன்.. இதுதான் காரணமா!
மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் ரவி மோகன் தற்போது தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினி்மாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரவி மோகன் கடந்த சில மாதங்களில் மனைவை ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது ஒரு பக்கம் ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றினார். பின்னர், கெனிஷா என்ற பாடகி உடன் நெருக்கமானது என அவரை பற்றிய செய்திகள் பரபரப்பாக வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரவி மோகன் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
விவாகரத்து கோரிய ரவி மோகன்
காதலிக்க நேரமில்லை படத்தை தொடர்ந்து ரவி மோகன் பராசக்தி, கராத்தே பாபு, சீனி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அரசியல் சார்ந்த படமாக கராத்தே பாபு இருக்கிறது. இப்படம் அமைச்சர் சேகர் பாபுவை மையமாக வைத்து எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் ரவிமோகன் காதல் மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருவரும் மாறி மாறி அறிக்கையை விட்டு புகார் தெரிவித்தனர். மேலும், மகன்களை விட்டு விட்டு போய்விட்டதாகவும் ஆர்த்தி புகார் தெரிவித்திருந்தார்.
கெனிஷாவுக்கு பார்ட்டி
ரவி மோகன் - ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இருவரும் புகார் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட கூடாது என நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. மனைவியை விட்டு பிரிந்து ரவி மோகன் காதலி கெனிஷாவுடன் இருக்கிறார். சமீபத்தில் கெனிஷா பாடிய பாடல் இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து ரவி மோகன் திரை பிரபலங்களை அழைத்து பார்ட்டி வைத்தார். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியானது. அதபோன்று தனது பெயரிலேயே புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். விவாகரத்திற்கு பிறகு ரவி மோகன் பொலிவுடன் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
மனைவியை பிரிந்தாலும் எனது மகன்களை பார்த்துக்கொள்வேன் என ரவி மோகன் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே நேற்று இரவு ரவி மோகன் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்திருந்தார். மூத்த மகன் ஆரவ் பிறந்தநாள் என்பதால் அவர் சந்தித்து கொண்டாடி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.





















