கதையில் ட்விஸ்ட்..மேட்சிங் உடையில் பாடகி கெனிஷாவுடன் வந்த ஜெயம் ரவி..என்னாவா இருக்கும் ?
தயாரிப்பாளர் ஐஷரி கணேஷ் மகள் திருமணத்திற்கு நடிகர் ஜெயம் ரவி பாடகி கெனிஷா பிரான்சிஸூடன் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐஷரி கணேஷ் மகள் திருமணம்
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர் ஐஷரி கணேஷ். இவரத் மகள் ப்ரீத்தாவுக்கு லஷ்வின் என்பவருக்கு இன்று சென்னையில் பிரம்மாண்டாமாக திருமணம் நடந்து வருகிறது. சென்னை ஆர்.கே கன்வென்ஷன் செண்டரில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள இந்த திருமணத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நிகழ்ச்சியில் நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷா பிரான்சிஸூடன் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து
ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜெயம் ரவி. இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கோலிவுட் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட ஜோடிகளில் ஒன்றாக இருந்து வந்தது ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடி. இப்படியான நிலையில்தான் நடிகர் ஜெயம் ரவி கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்தார். இந்த விவாகரத்திற்கு பல்வேறு காரணங்கள் இணையத்தில் வதந்திகளாக பரவின. தனது திருமண உறவில் தான் மதிக்கப்படவில்லை என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். ஜெயம் ரவிக்கும் கெனிஷா பிரான்சிஸ் என்கிற பாடகிக்கும் உறவு இருப்பதாக சமூக வலைதளங்கள் பரவின. இந்த வதந்திகளை ஜெயம் ரவி மறுத்தார்.
மேட்சிங் உடையில் ஜெயம் ரவி கெனிஷா
ஆனால் தற்போது தன் சொன்னதற்கு மாறாக கெனிஷாவுடன் தங்க நிற மேட்சிங் உடையில் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போ கெனிஷாவுடன் ரவி மோகனுக்கு காதல் தொடர்பு இருந்தது உண்மைதானா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.





















