Ranveer Singh Poses Naked: என் ஆன்மாவை பாருங்கள்.. உடைகளை கழட்டி நிர்வாணமாக போஸ் கொடுத்த ரன்வீர் சிங்! வைரல் போட்டோ!
எப்பொழுதும் உடைகளில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்ட முயற்சிக்கும் ரன்வீர் சிங், இந்த முறை நிர்வாண மற்றும் அரை நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ரன்வீர் சிங் இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானவர். பாலிவுட்டின் அசைக்க முடியாத நட்சத்திரங்களுள் ஒருவர். ரன்வீர் இந்தியான பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவர். சிறு வயதுலேயே மேடை நாடகம் , பள்ளி விழாக்கள் என நடிப்பு மீது அதீத ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார். சினிமா மீது அதீத ஈடுபாடு கொண்டதால் தனது கெரியரை பாலிவுட் நோக்கி திருப்பினார். 2010 ஆம் ஆண்டு வெளியான பேண்ட் சர்மா பாராத் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமனார். அனுஷ்கா ஷர்மாவிற்கு ஜோடியாக நடித்த ரன்வீருக்கு முதல் படமே கம்ர்ஷியல் ஹிட்டானது. நகைச்சுவை காதல் படமான அந்த படத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்தியதால் , அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதும் கிடைத்தது.
ரன்வீர் சிங் கடந்த 2013 முதல் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலில் இருந்த ஜோடிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துக்கொண்டனர்.
ரன்வீர் சிங் எப்போதுமே வித்தியாசமாக உடை அணியக்கூடியவர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட அவர் அதனை அத்தனை நம்பிக்கையுடன் அணிந்து வருவதை பார்த்தால் ஃபேஷன் மீது ரன்வீருக்கு இருக்கும் ஈடுபாடு வெளிப்படையாகவே தெரியும். உடைக்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்தை மாற்றுவதுதான் ரன்வீரின் ஸ்டைல் . பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக ரன்வீர் கொண்டாடப்படுகிறார்.
View this post on Instagram
இந்த நிலையில், எப்பொழுதும் உடைகளில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்ட முயற்சிக்கும் ரன்வீர் சிங், இந்த முறை நிர்வாண மற்றும் அரை நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் அதிகளவில் வட்டமடித்து வருகிறது.
ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸுக்கு சமர்பணம் செய்யும் விதமாக ரன்வீர் சிங் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தனது நிர்வாண போஸை கொடுத்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸ் ஏற்கனவே கொடுத்திருந்த புகைப்படத்தை மாடலாக கொண்டு அதே போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். ஒரு சிலர் ரன்வீர் சிங் எடுத்த முயற்சியை பாராட்டினாலும், மற்றொரு புறம் இவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய நடிகர் ரன்வீர் சிங், “ நான் உடல் ரீதியாக நிர்வாணமாக இருப்பது மிகவும் எளிதானது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக நான் நிர்வாணமாக இருந்துள்ளேன். முதலில் என் ஆன்மாவை நீங்கள் பார்க்க வேண்டும். அது எவ்வளவு நிர்வாணமாக இருக்கிறது என்று? ஆம், நிச்சயமாக என் உடலோடு என் ஆன்மாவும் நிர்வாணமாகதான் இருக்கிறது. என்னால் ஆயிரம் பேருக்கு முன்னாள் நிர்வாணமாக இருக்க முடிகிறது. ஆனால், அந்த ஆயிரம் பேரும் என் முன்னால் அசௌகரியமாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்