மேலும் அறிய

Rajinikanth: "அவரு என் ஃப்ரண்ட்தான்" ரஜினிகாந்த்! "நான் காமெடியாதான் பேசுனேன்" துரைமுருகன்!

அமைச்சர் துரைமுருகன் தனது நீண்டகால நண்பர் என்றும், அவர் பேசியதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். துரைமுருகன் எனது நண்பர். எங்கள் நட்பு எப்போதும் தொடரும் என்றும் பேசினார். 

துரைமுருகன் நண்பர், விஜய்க்கு வாழ்த்து:

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியை கொடியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நடிகர் விஜய் கடந்த 22ம் தேதி அக்கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. நட்பு எப்போதுமே தொடரும் என்றும் கூறினார்.

ரஜினி பேசியது என்ன?

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், தி.மு.க.வில் உள்ள மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை குறிப்பிட்டு, ஸ்கூல் டீச்சருக்கு நியூ ஸ்டூடண்ட்ஸ் ப்ராப்ளமே கிடையாது. பழைய ஸ்டூடண்ட்ஸ்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சாதாரண மாணவர்கள் இல்லை. அசாதாரணமானவர்கள். ஃபெயில் ஆகிவிட்டு இவர்கள் உட்கார்ந்திருக்கவில்லை. ரேங்க் வாங்கிவிட்ட பிறகும் கிளாசை விட்டுப் போக மாட்டோம் என்று உட்கார்ந்திருக்கிறார்கள். அதுவும் துரைமுருகன் என்றொரு பழைய மாணவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர் என்று பேசினார்.  

ரஜினிகாந்தின் பேச்சு இணையத்தில் வைரலானதுடன் தி.மு.க.வில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மறைமுகமாக கூறுவது போல அமைந்தது. ரஜினிகாந்த் பேசியபோது விழா மேடையில் சிரிப்பொலி எழுந்தாலும், இந்த கருத்து தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது.

துரைமுருகன் விளக்கம்:

ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு பதிலளித்த துரைமுருகன் வயதான நடிகர்கள் தாடி வளர்ந்து, பல் விழுந்த பிறகும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமலா போய்விட்டது? என்று கேள்வி எழுப்பினார். இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த் துரைமுருகன் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள துரைமுருகன், ரஜினிகாந்த் குறித்து நகைச்சுவையாகவே பேசினேன் என்றும், நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டும். நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு விடுத்து பின்னர் உடல்நலம் கருதி ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில், அவரைப் போலவே தமிழில் மிகப்பெரிய நடிகராக உலா வரும் நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதற்கு ரஜினிகாந்த் வாழ்தது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? -  கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? - கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க... கொடை ரோடு அரசு பள்ளி மாணவர்கள் பாடல் வைரல்
எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க... கொடை ரோடு அரசு பள்ளி மாணவர்கள் பாடல் வைரல்
GST Credt Card: கிரெடிட்/டெபிட் கார்ட் பயனர்களுக்கு ஆப்பு - ரூ.2000-க்கு 18% ஜிஎஸ்டி வரி, மத்திய அரசின் அதிரடி திட்டம்
GST Credt Card: கிரெடிட்/டெபிட் கார்ட் பயனர்களுக்கு ஆப்பு - ரூ.2000-க்கு 18% ஜிஎஸ்டி வரி, மத்திய அரசின் அதிரடி திட்டம்
Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai School Students : அரசு நிகழ்ச்சில் சாமி பாடல்! சாமி ஆடிய மாணவிகள்!Vineeth Srinivasan on Nivin Pauly : சிக்கலில் நிவின் பாலி?ஆதாரத்தை வெளியிட்ட DIRECTOR! புது TWISTJammu Kashmir Cong.Manifesto : தள்ளி போய் விளையாடுங்க!காலரை தூக்கும் ராகுல்! காங்.வசமாகும் காஷ்மீர்!MahaVishnu Profile | நித்தியானந்தா 2.0?காமெடியன் To ஆன்மீகம்!யார் இந்த மகாவிஷ்ணு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? -  கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? - கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க... கொடை ரோடு அரசு பள்ளி மாணவர்கள் பாடல் வைரல்
எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க... கொடை ரோடு அரசு பள்ளி மாணவர்கள் பாடல் வைரல்
GST Credt Card: கிரெடிட்/டெபிட் கார்ட் பயனர்களுக்கு ஆப்பு - ரூ.2000-க்கு 18% ஜிஎஸ்டி வரி, மத்திய அரசின் அதிரடி திட்டம்
GST Credt Card: கிரெடிட்/டெபிட் கார்ட் பயனர்களுக்கு ஆப்பு - ரூ.2000-க்கு 18% ஜிஎஸ்டி வரி, மத்திய அரசின் அதிரடி திட்டம்
Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Vettaiyan: மனசிலாயோ! ரஜினிகாந்தின் வேட்டையன் பாடலை கேட்க ரெடியாகுங்க! எப்போ வருது?
Vettaiyan: மனசிலாயோ! ரஜினிகாந்தின் வேட்டையன் பாடலை கேட்க ரெடியாகுங்க! எப்போ வருது?
Breaking News LIVE: குறைந்த தங்கம் விலை: எவ்வளவு? இன்றைய நிலவரம்
Breaking News LIVE: குறைந்த தங்கம் விலை: எவ்வளவு? இன்றைய நிலவரம்
Ganesh Chaturthi Pooja: சினிமா பிரபலம் முதல் அரசியல்வாதிகள் வரை பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம்!
Vinayagar Chaturthi 2024: சினிமா பிரபலம் முதல் அரசியல்வாதிகள் வரை பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம்!
CAT 2024: இன்னும் சில நாட்கள்தான்...எம்பிஏ சேர கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
CAT 2024: இன்னும் சில நாட்கள்தான்...எம்பிஏ சேர கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Embed widget