மேலும் அறிய

Rajinikanth : தன் சிலையை அருங்காட்சியகத்தில் பார்த்த ரஜினி.... ஏ.வி.எம். அருங்காட்சியத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஏ.வி.எம். பண்பாட்டு அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டார்

ஏ. வி. எம் அருங்காட்சியகத்திற்கு  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்று பார்வையிட்டு வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் ஏ.வி.எம் ஸ்டூடியோ பண்பாட்டு அருங்காட்சியகம் ஒன்றை அண்மையில் அமைத்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்வில் உலக நாயகன் கமலஹாசன்,வைரமுத்து, நடிகர் சிவக்குமார் ஆகிய திரைப் பிரபலங்கள் மற்றும்  ஏ.வி.எம் குடும்பத்தின் உறுப்பினர்களும்  கலந்துகொண்டார்கள்.

இதனிடையே தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.வி.எம் அருங்காட்சியகத்தை சென்று பார்வையிட்டு வந்துள்ளார். அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு பழமையான பொருட்களை வரிசையாக பார்த்து வந்தார் ரஜினிகாந்த் 1983 ஆம் ஆண்ட் வெளியான பாயும்புலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் திரைப்படத்தில் அவர் ஓட்டிய சுஸுகி ஆர்.வி.90 ரக கார்  மற்றும் சிவாஜி திரைப்படத்தில் ரஜினியின் உருவத்தில் பயன்படுத்தியிருந்த சிலையும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிரமித்துப் போனார். 

ஏ.வி. எம். அருங்காட்சியகம்

நூறாண்டு கால தமிழ் சினிமாவின் வளர்ச்சியில்  ஏ. வி. எம் ஸ்டுடியோவிற்கு மிக முக்கியமான பங்கு இருந்து வருகிறது. தமிழ், கன்னடம்  தெலுங்கு , மலையாளம்,ஹிந்தி  ஆகிய மொழிகளில் 300 படங்களுக்கு மேல்  தயாரித்துள்ளது. தற்போது இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான  தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம் ஸ்டுடியோ தான். இந்த தயாரிப்பு  நிறுவனத்தின் இத்தனை ஆண்டுகால சாதனையை அடுத்து வரும் தலைமுறையினருக்கு  கொண்டு சேர்க்கவும் பல அரிதான பொருட்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஏ.வி.எம் பண்பாட்டு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.  

பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள்

இந்த அருங்காட்சியகத்தில் எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களில் அணிந்த ஆடைகள், நடிகர் கமலஹாசன் அணிந்த ஆடைகள் முதலிய பொருட்கள்  பராமரிக்கப் பட்டுள்ளன. மேலும் பல்வேறு படங்களில் படத்தொகுப்பு ஒளிப்பதிவுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள்,கலைப்பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் தமிழ் திரைப்படங்களில் வெவ்வேறு  நடிகர்களால் பயன்படுத்தப்பட்ட 40 கார்கள், 20 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை நீங்கே பார்க்கலாம்.ஏ.வி.எம் ஸ்டுடியோவை நிறுவிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்களில் சிலையும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் ஏ.வி.எம் ஸ்டுடியோவின் இத்தனை ஆண்டுகால சாதனையைப் போற்றும் வகையில் சிறிய கானொளி ஒன்றும் திறப்பு விழாவின்போது வெளியிடப் பட்டது.

விரைவில் மீண்டும் திரைப்படங்களை தயாரிப்பதற்கான திட்டம்  இருப்பதாகவும் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக  ஏவிஎம் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget