மேலும் அறிய

15 Years of Kuselan: வந்தது 1 மணிநேரம்.. ஆனால் சிக்கலில் சிக்கிய ரஜினி படம்.. 15 ஆண்டுகளை நிறைவு செய்த ‘குசேலன்’..!

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘குசேலன்’ படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘குசேலன்’ படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிக்கு சிறப்பு தோற்றத்தில் நடிப்பது என்பது புதிது கிடையாது. ஆனால் அதெல்லாம் சூப்பர் ஸ்டாராக வளரத் தொடங்கிய காலத்தில் இருந்தது. ஆனால் 2000 ஆம் ஆண்டு பின்னால் அவர் ‘குசேலன்’ படத்தில் அப்படி ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். 

பி. வாசு இயக்கிய இப்படத்தில் பசுபதி, மீனா, வடிவேலு, பிரபு, சந்தானம், கீதா, விஜயகுமார், லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், சந்தான பாரதி, தியாகு என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த குசேலன் படம்  மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற கதபறயும்போல் படத்தின்  ரீமேக் ஆகும். இந்த படத்தில் மொத்தமே 1 மணி நேரம் தான் ரஜினி வருவார். ஆனால் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. 

கதைச் சுருக்கம் 

முடி திருத்தும் ஏழைத் தொழிலாளியான பசுபதிக்கும், சூப்பர்ஸ்டாராகவே வரும் ரஜினிக்கும் இடையே சிறு வயது நட்பு இருக்கும். இதனிடையே பசுபதி கிராமத்திற்கு சினிமா ஷூட்டிங்கிற்காக ரஜினி வருவார்.  ஆனால் பசுபதி ரஜினி தனது நண்பன் என்பதை வெளிக்காட்டாமல் இருப்பார்.  அதேசமயம் கடைக்கண் பார்வை தங்கள் மீது பட்டு விடாதா என்று ரசிகர்கள் ஏங்கும் நிலையில் பசுபதி மட்டும் ரஜினியை பார்க்க போகாமல் இருப்பார். கடைசியில் அவர் சூப்பர் ஸ்டாரை எப்படி சந்திக்கிறார்? இவர்களின் நட்பு எந்த அளவில் இருந்தது என்பதை இப்படம் விளக்கியது. 

இந்த படத்தில் அனைவராலும் கிளைமேக்ஸ் காட்சி ரசிக்கும்படி அமைக்கப்பட்டது. ஊரே கூடி நிற்க விழா ஒன்றில் பேசும் ரஜினி, இன்றைக்கு நான் சூப்பர் ஸ்டார் ஆக பசுபதி தான் காரணம் என சிறுவயது நிகழ்வுகளை கூறுவார். ஆனால் அவன் எங்க இருக்கானே தெரியல என கண்கலங்குவார். பின்னர் பசுபதி - ரஜினி சந்திக்கும் காட்சி இடம் பெறும். இது இன்றும் நட்பு வட்டாரங்களில் ஸ்டேட்டஸ் ஆக பகிரப்படுகிறது. படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. 

ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்த படம் 

தமிழ் திரைப்பட வரலாற்றில் குசேலன் படம் மூன்றாவது பெரிய வெளியீடாக அமைந்தது. ஆனால் ரிலீசுக்கு முன்பே இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றதால் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்தது. படத்தில் வடிவேலு சிகை அலங்கார தொழிலாலர்களை கிண்டல் செய்யும் வண்ணம் காமெடி காட்சிகளை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த படம் வெளியாவதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினிகாந்த் கர்நாடக அரசியல்வாதிகளை கண்டித்து கருத்து தெரிவித்தார். இதனால் கர்நாடகாவில் ரஜினி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, குசேலன் படம் வெளியாகாது எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. கடைசியில் ரஜினி தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார்.ஆனால் அவர் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது.  

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Embed widget