Kalaingar 100: “அதிமுகவுக்கு ஓட்டு.. கருணாநிதியை பார்க்க முடியாமல் தவிர்த்தேன்” - கலைஞர் 100 விழாவில் ரஜினி பகிர்ந்த தகவல்
கலைஞர் கருணாநிதி தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
கலைஞர் 100 விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதிக்கும் தனக்குமான மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றி தெரிவித்த கருத்துகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதியில் இருந்து தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் மிக்ஜாம் புயலால் சென்னை பெரும் பாதிப்புக்குள்ளானதால் இந்த நிகழ்ச்சியானது ஜனவரி 6 ஆம் தேதி கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்த நிலையில் திட்டமிட்டபடி கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, நயன்தாரா, இயக்குநர் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சூரியன் பக்கத்துல உட்காருங்க ரஜினி
இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, கருணாநிதியை தான் சந்திக்க மறுத்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார். அதாவது “கலைஞருக்கு நெருக்கமான நடிகர் ஒருத்தர் இருந்தாரு. அவர் தன்னோட படத்தை கலைஞருக்கு போட்டு காட்ட பிரிவியூ ஷோ ஏற்பாடு பண்ணிருந்தாரு. அந்த சமயத்துல தான் தேர்தல் வாக்குப்பதிவும் நடந்துச்சு. ஓட்டு போட்ட பிறகு அந்த நடிகர் கிட்ட பத்திரிக்கையாளர்கள் யாருக்கு ஓட்டு போட்டீங்கன்னு கேட்க, அந்த நடிகரோ இரட்டை இலை என பதில் சொல்லி விட்டார். இது பத்திரிக்கைகளில் வெளியாகி மிகப்பெரிய செய்தியாகி விட்டது. இப்போது அந்த நடிகருக்கு தான் நடித்த படத்தை பார்க்க ப்ரிவியூ ஷோவுக்கு வந்த கலைஞரை பார்ப்பதில் சங்கடமான சூழல் உண்டாகிறது. அதனால் குளிர் காய்ச்சல் என சொல்லி அந்த நிகழ்வுக்கு செல்லாமல் தவிர்க்கிறார்.
Rajini funny incident 😂
— Cinema Cinema (@Reyas_Cena25) January 6, 2024
(Follow has for #Kalaignar100 updates, exclusive video & pics✨) pic.twitter.com/Xt45Q0PAwg
ஆனால் நீங்க வந்ததா படம் ஸ்டார்ட் பண்ண வேண்டும் என கலைஞர் சொன்னதாக அவருக்கு போன் வருகிறது. அந்த நடிகரும் வேற வழியில்லாமல் பிரிவியூ ஷோ பார்க்க போனாரு. உள்ளே போனதும் கலைஞர் பக்கத்துல ஒரு சேர் காலியா இருந்துச்சு. அவர் அந்த நடிகரை பார்த்து, ‘வாங்க குளிர் ஜூரம்ன்னு சொன்னாங்க. சூரியன் (கலைஞர்) பக்கத்துல உட்காருங்க. குளிர் போய்விடும்’ என சொன்னார். அந்த நடிகர் வேற யாருமல்ல ரஜினிகாந்த் தான்” என சொன்னார். இதனைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் மத்தியிலும் சிரிப்பலை எழுந்தது.
மேலும் படிக்க: Kalaingar 100 function: முற்போக்கு சிந்தனையாளர்; சீர்திருத்தவாதி... திரையுலகை பலப்படுத்திய கலைஞருக்கு நூற்றாண்டு விழா...