மேலும் அறிய

Rajinikanth: ’உனக்கு ஆசைப்படுறதுக்கு தகுதி இருக்கா?’ .. இணையத்தில் வைரலாகும் ரஜினியின் வீடியோ..

ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி கதை சொன்னாலும் சொன்னார், அவரது ரசிகர்கள் இருக்கிற பழைய வீடியோவை எல்லாம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி கதை சொன்னாலும் சொன்னார், அவரது ரசிகர்கள் இருக்கிற பழைய வீடியோவை எல்லாம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

4வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “ஜெயிலர்” படத்தை தயாரித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169வது படமாக உருவான இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி என பலரும் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி  நடித்துள்ள நிலையில்,  படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளது. இப்படியான நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ரஜினி, “நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இலக்கை நோக்கி சென்றால் முன்னேறி விடலாம்” என்ற அறிவுரையை  கழுகு - காகம் கதை வழியாக ரசிகர்களுக்கு தெரிவித்தார். இது இணையத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் காரசார விவாதமும் நடைபெற்றது. இப்படியான நிலையில் ரஜினியின் பழைய வீடியோக்கள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 

அதில் சிவாஜி படத்தின் 175வது நாள் விழாவில் பங்கேற்ற ரஜினி, ஆசைப்படுவதற்கும், அதை அடைவதற்கும் உண்டான கபில முனிவரின் கருத்துகளை தெரிவித்திருந்தார். அந்த வீடியோ ட்ரெண்டிங்கில் உள்ளது. அதில், “சாங்கிய யோகா நான் ஃபாலோ பண்றேன். அதுல என்ன சொல்றாங்கன்னா ஆசைப்படு.. ஆனால் அதை அடைவதற்கு வியூகம் சேர்க்க வேண்டும். அதை சரியாக செயல்படுத்த வேண்டும். அப்படி செய்யும் போது வரும் பலனை முதலில் நீ அனுபவி. மீதமுள்ளதை கொடுத்து விடு. சாப்பிட்டத்தை உடம்பிலேயே வைத்து கொண்டால் உடம்பு கெட்டு போயிடும். சம்பாதிச்சதை நாமளே வைத்துக் கொண்டால் வாழ்க்கை கெட்டுப் போயிடும். 

கபிலமுனி சொல்கிறார். ஆசைப்படுவதற்கு உனக்கு தகுதி இருக்கா.. அதை உன்னாலே அடைய முடியுமா.. சைக்கிளே வாங்க முடியல உன்னால கார் வாங்க முடியுமா? . இது பேராசை இல்ல.தகுதி இருக்கா என முதலில் ஆராய வேண்டும். பின்னர் தகுதி இருந்தால் அந்த விஷயத்தை அடைவதற்கு தேவையான நபர்கள், புத்தகங்கள் இதையெல்லாம் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் சரியான நபர்களை சேர்த்துக் கொண்டு அந்த ஆகாயமே கீழே விழுந்தாலும் மனதை மாற்றாமல் செய்தால் நீ நினைத்ததை அடைவாய் என்பதை சாங்கிய யோகா சொல்கிறது” என தெரிவித்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by King Real (@thalaivar_superstar_fans_club)

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Embed widget