(Source: ECI/ABP News/ABP Majha)
Parthiban: கலைஞர் 100 விழாவில் பார்த்திபன் செய்த செயல்.. கடைசி வரை வெளியே தெரியாமல்போன சம்பவம்..!
“கலைஞர் 100” நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் சினிமா பயணம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
கலைஞர் 100 விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பரிசு கொடுத்து முக்கியமான தகவல் ஒன்றை நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நேற்று “கலைஞர் 100” நிகழ்ச்சி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், ஜெயம் ரவி, அருண் விஜய், சாக்ஷி அகர்வால்,சூர்யா, நயன்தாரா,கார்த்தி, பா.ரஞ்சித், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், வடிவேலு, ரோஜா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் சினிமா பயணம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் திரைத்துறையினர் பயன்பெறும் வகையில் பூந்தமல்லியில் ரூ.540 கோடி செலவில் சகல வசதிகளுடன் கூடிய நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது, அதாவது பரீட்சை அட்டையில் அதில் மாட்டியிருக்கும் கிளிப்பில் கலைஞர் படம் பொறிக்கப்பட்டிருந்தது. ஒரு பேப்பர் மாட்டப்பட்டு, அதில் “ஐயா! ஐயமில்லை. காற்றுள்ள வரை தமிழும், தமிழ் உள்ள வரை தங்களின் நினைவும் நிலைக்கும். ‘கலைஞர் 100’ அல்ல, ‘கலைஞர் 1000’ கூட கொண்டாடுவோம். தங்களின் மறுபதிப்பாம் எங்களின் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இப்பரிசினை வழங்கி உங்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறோம்” என தெரிவித்திருந்தார்.
கலைஞரின் நினைவாக நேற்று வழங்கிய பரிசு நான் வடிவமைத்து.இரு மரத்தை இழைத்து pad&paper ஆக்கியது திரு சண்முகம். அதில் பித்தளை க்ளிப்பை சொருகியது திரு கேசவன்.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 7, 2024
என் பெயரை அதில் பொறிக்காமலே சிலர் கேட்டார்கள் “இது நீங்கள் செய்ததா?”வென. மகிழ்ச்சி.நேரமின்மையால் நான் பேசா விட்டாலும் என்… pic.twitter.com/68du7yMO4E
இந்நிலையில் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கலைஞரின் நினைவாக நேற்று வழங்கிய பரிசு நான் வடிவமைத்து.இரு மரத்தை இழைத்து pad&paper ஆக்கியது திரு சண்முகம். அதில் பித்தளை க்ளிப்பை சொருகியது திரு கேசவன். என் பெயரை அதில் பொறிக்காமலே சிலர் கேட்டார்கள் “இது நீங்கள் செய்ததா?”வென. மகிழ்ச்சி.நேரமின்மையால் நான் பேசா விட்டாலும் என் குரல் இயக்குநர் k.s.ரவிக்குமார் நாடகத்தில் ஒலித்தது” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: Kalaingar 100: “ரூ.540 கோடியில் திரைப்பட நகரம் அமைக்கப்படும்” - கலைஞர் 100 விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு