Watch video : ”பூதம் கெட்டப் பார்த்து நல்லா இருக்குன்னு நினைச்சேன், முடி எடுக்குறப்ப”... நடிகர் பிரபு தேவா பாதி மொட்டை வீடியோ வைரல்!
மை டியர் பூதம் திரைப்படத்திற்காக நடிகர் பிரபு தேவா பாதி மொட்டை எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடன இயக்குநராக பலரின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கல் ஜாக்ஸன் என்றே பிரபு தேவாவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாலிவுட், கோலிவுட் என கலக்கி வருகிறார் பிரபுதேவா. சமீக காலமாக பெக்யூலியர் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘’மை டியர் பூதம் ‘ .
90 களில் வாழ்ந்த குழந்தைகளுக்கு இந்த பெயர் பரீட்சியமாக இருக்கலாம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் தொடரை அவர்கள் யாரும் அவ்வளவும் எளிதாக மறந்து விட முடியாது. இந்நிலையில் பிரபுதேவா நடித்துள்ள புதிய பெயருக்கும் அதே பெயர் வைக்கப்பட்டிருப்பது கவனத்தை பெற்றுள்ளது. ஃபேண்டஸி என்னும் மாயாஜால கதைக்களத்துடன் உருவாகியுள்ள மைடியர் பூதம் திரைப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். நடிப்பிற்கான ஸ்கோப்பை அதிகமாக தேடி வரும் பிரபுதேவா, தற்போது களமிறங்கியிருக்கும் மை டியர் பூதம் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில், மை டியர் பூதம் திரைப்படத்திற்காக நடிகர் பிரபு தேவா பாதி மொட்டை எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிரபு தேவா, மை டியர் பூதம் படத்திற்காக பூதம் கெட்டப் பார்க்குறப்ப நல்லா இருந்துச்சு. ஆனா அந்த கெட்டப்க்காக முடி எடுக்கணும்ன்னு நினைக்குறப்ப” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
View this post on Instagram
என்.ராஜவன் இயக்கத்தில் ‘மை டியர் பூதம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் மாஸ்டர் அஸ்வந்த் குமார், ரம்யா நம்பீசன், பிக் பாஸ் சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக இப்படத்தை ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஜுலை 15 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்