Prabhas Baahubali Statue: பாகுபலியா இல்ல டேவிட் வார்னரா.. பிரபாஸ் சிலையால் ரசிகர்கள் குழப்பம்!
சமீபத்தில் பாகுபலி பிரபாஸுக்கு மைசூர் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், பாகுபலி படத்தை எடுத்த தயாரிப்பாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Prabhas' Baahubali statue: மைசூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பாகுபலி பிரபாஸின் மெழுகு சிலைக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அருங்காட்சியகம் சிலையை அகற்ற முடிவெடுத்துள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் எடுக்கப்பட்ட பாகுபலி இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெற்றிபெற்று பாக்ஸ் ஆபிசில் ரூ. 1000 கோடிக்கு சாதனை படைத்தது. அதில் பாகுபலியாக நடித்த பிரபாஸ் உலக அளவில் பிரபலமானார். டிரெண்டிங்கிலும் பாகுபலி முதலிடத்தை பிடித்திருந்தது.
பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றியைக் கொண்டாடும் விதமாக பாங்காக்கில் இருக்கும் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபாஸின் மெழுகு சிலை வைக்கப்பட்டது. அதுவரை வேறு எந்த தென்னிந்திய நடிகருக்கும் அங்கு மெழுகு சிலை வைத்ததில்லை. இதனால், மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை இருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பிரபாஸ் பெற்றிருந்தார்.
This not an officially licensed work and was done without our permission or knowledge. We will be taking immediate steps to get this removed. https://t.co/1SDRXdgdpi
— Shobu Yarlagadda (@Shobu_) September 25, 2023
இந்த நிலையில், சமீபத்தில் பாகுபலி பிரபாஸுக்கு மைசூர் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதுடன், பாகுபலி படத்தை எடுத்த தயாரிப்பாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சிலை பிரபாஸ் போல் இல்லாமல் டேவிட் வார்னரை போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து பேசிய பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா, தங்களின் அனுமதி பெறாமல் பாகுபலி சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலை வைப்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பாகுபலி தயாரிப்பாளரின் எதிர்ப்பை தொடர்ந்து, யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை என விளக்கம் அளித்து அருங்காட்சியகத்தில் உரிமையாளர் பாஸ்கர், அங்கு வைக்கப்பட்டிருக்கும் சிலையை அகற்ற முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதற்கிடையே கம்பீரமான தோற்றத்தை தரும் பாகுபலியை இப்படியா அசிங்கப்படுத்துவது என மெழுகு சிலையை பார்த்த பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ராஜமௌலி இயக்கிய பாகுபலியில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர், சத்யராஜ், பொன்வன்னன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்தனர். முதல் பாகத்தில் பாகுபலியை கட்டப்பா குத்தும் காட்சியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. அதில், வரும் பாகுபலி காதல், திருமணம் உள்ளிட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தின் இடம்பெற்றிருந்த பிரம்மாண்டம் பான் இந்தியா படமாக பாகுபலியை கொண்டாட வைத்தது. தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படம் திரையில் ரிலீசாக தயாராகி வருகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: Nivetha Pethuraj: அடடே.. பொன்னியின் செல்வன் படத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்க வேண்டியதா.. என்ன கேரக்டர் தெரியுமா?