Adipurush: ‘ஹனுமனுக்கு பக்கத்து சீட் வேணுமா?’ .. உடனே டிக்கெட் புக் பண்ணுங்க... ஆதிபுருஷ் முன்பதிவு தொடக்கம்..!
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான் ஆகியோர் நடித்துள்ள படம் “ஆதிபுருஷ்”. இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
பாகுபலிக்குப் பிறகு பிரபாஸூக்கு எந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் ஆதிபுருஷ் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இதற்கிடையில் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ரூ.700 கோடி செலவில் உருவானதாக சொல்லப்படும் ஆதிபுருஷின் கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேம் கிராபிக்ஸை விட மோசமானதாக உள்ளதாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் மேலும் ரூ.100 கோடி செலவு செய்து கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்தினர்.
முன்னதாக கடந்த ஜூன் 6 ஆம் தேதி ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்னதாக படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். இதன்பிறகு கோவில் வளாகத்தில் இயக்குநர் ஓம் ராவத் நடிகை கீர்த்தி சனோனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதற்கிடையில் ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மீண்டும் ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் ஹனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என இயக்குநர் ஓம் ராவத் தயாரிப்பாளரிடமும், விநியோகதஸ்களிடமும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்படியான நிலையில் ஆதிபுருஷ் படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். “தியேட்டரில் சாதாரண டிக்கெட் ரூ.200, ஹனுமனுக்கு பக்கத்தில் சீட் வேண்டுமென்றால் ரூ.500” என ட்ரோல் செய்கின்றனர்.
மேலும் படிக்க: Adipurush Free Ticket: ராமர் மீது கொண்ட பக்திகொண்ட ப்ரொட்யூசர்.. ஆதிபுருஷ் படத்துக்கு 10,000 டிக்கெட்டுகள் இலவசம்.. எப்படி வாங்கலாம்?