மேலும் அறிய

Parthiban : அழகி படத்தில் தனம் பிடிக்குமா? வளர்மதி பிடிக்குமா? பார்த்திபன் சொன்ன பதில்..

அழகி படத்தில் வளர்மதி கேரக்டர் பிடிக்குமா? தனம் கேரக்டர் பிடிக்குமா? என்று நடிகை தேவயானி கேட்ட கேள்விக்கு பார்த்திபன் பதிலளித்தார்

 நிறைவேறாத காதலின் மேல் எப்போது நமக்கு ஒரு பூரிப்பு இருக்கும் என்று பார்த்திபன் கூறினார்

அழகி

தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான அழகி படம் 22 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனை முன்னிட்டு இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. அழகி படத்தின் படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் அழகி படத்தில் நடித்த இயக்குநர் பார்த்திபன் , நடிகை தேவயானி, தயாரிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இயக்குநர் தங்கர் பச்சன் தற்போது தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால், அவரால் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை தேவயானி அழகி படத்தைப் பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

யாருமே நினைச்சுக்கூட பார்க்கல..

நிகழ்ச்சியில் பேசிய தேவயானி “அழகி படம் நடிக்கும்போது 22 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் மீண்டும் இப்படி ரிஸீசாகும் என்று யாருமே நினைத்து பார்க்கல. இப்படியான ஒரு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் உதயகுமார் அவர்களுக்கு  நான் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காதல் கோட்டை படத்தில் நான் நடித்தபோது தங்கர் பச்சன்தான் அந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். அவருடைய ஒளிப்பதிவில் நடிக்கும்போது நாம் மேக்-அப் போட தேவையில்லை. ஒரு ஓவியம் மாதிரி அவரது காட்சிகள் அழகாக இருக்கும் . எனக்கு திருமணம் ஆன புதிதில் அழகி படத்தின் கதையை தங்கர் பச்சான் என்னிடம் சொன்னார். எனக்கு கதை ரொம்ப பிடித்திருந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தப் படம் மீண்டும் வெளியாவது எங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை சந்திக்க வைத்திருக்கிறது. இப்போது  நான் என்னுடைய மகள்களுடன் சென்று பார்க்கப் போகிறேன். எனக்கு இது மிகவும் புதுமையானதாக அனுபவமாக இருக்கப்போகிறது“ என்று பேசினார்.

தனம் பிடிக்குமா? வளர்மதி பிடிக்குமா?

தொடர்ந்து பேசிய தேவயானி இப்படத்தில் நடித்த பார்த்திபனிடம், உங்களுக்கு தனம் பிடிக்குமா? வளர்மதி பிடிக்குமா? என்கிற கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த நடிகர் பார்த்திபன் ”காதலியை காதலிப்பது என்பது ஒரு எளிமையான விஷயம். தோல்வியடைந்த காதல் என்பதே தெய்வீக காதல் தான். நிறைவடையாத காதல் நம்மை விட்டு எப்போதும் செல்வதில்லை. அதனால் காதலியை விட நம் வாழ்க்கையில் புதிதாக வந்த மனைவியை காதலிப்பது என்பது சவாலானது. நம்முடைய எல்லா குறைகளையும் ஏற்றுக்கொண்டு இருக்கும் ஒருவரை காதலிப்பதுதான் அழகானது. அந்த கதாபாத்திரத்தை தேவயானி சிறப்பாக செய்திருந்தார்”  என்று பார்த்திபன் கூறினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்Rahul gandhi with dogs | ”BESTFRIEND-க்கு உடம்பு முடியல” நாயுடன் விளையாடும் ராகுல்! வைரல் வீடியோOdisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
IPL CSK: 3 முறை மட்டுமே மிஸ்ஸிங்! ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே.தான் கில்லி! அதிலும் ஒரு ட்விஸ்ட்!
IPL CSK: 3 முறை மட்டுமே மிஸ்ஸிங்! ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே.தான் கில்லி! அதிலும் ஒரு ட்விஸ்ட்!
Thug Life: இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்... செம அப்டேட் கொடுத்த தக் லைஃப்  டீம்!
Thug Life: இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்... செம அப்டேட் கொடுத்த தக் லைஃப் டீம்!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்..!  உஷாரா இதை தெரிஞ்சுகிட்டு போங்க மக்களே ..!
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்..! உஷாரா இதை தெரிஞ்சுகிட்டு போங்க மக்களே ..!
"குவைத்தில் கைதிகளாகியுள்ள தமிழக மீனவர்கள்" வௌியுறவுத்துறைக்கு மீண்டும் கடிதம் எழுதிய தமிழக அரசு!
Embed widget