VTK Movie : கமலுடன் செல்ஃபி..! ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..! VTK சுவாரஸ்யம் பற்றி மனம்திறந்த நீரஜ்மாதவ்..
சிம்பு நடித்த வெந்து தணிந்தது நாடு படத்தில் ஸ்ரீதரன் கதாபாத்திரத்தில் நடித்த நீரஜ்மாதவிற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தது குறித்து பிரபல மலையாள நடிகர் நீரஜ் மாதவ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்த இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்திருந்தார்.
இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியான தியேட்டர்களில் வெளியானது. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. எதிர்பார்த்தை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சக்ஸஸ் பார்ட்டிகளும் கொண்டாடப்பட்டது.
இந்த படத்தில் ஸ்ரீதரன் என்னும் கேரக்டரில் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. நீரஜ் தான் 2 பாகத்தில் சிம்புவுக்கு வில்லனாக இருப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு நீரஜ் மாதவ் அளித்துள்ள நேர்காணலில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தது குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அந்த பேட்டியில் அவர் என்னுடைய முதல் படத்திலேயே மக்கள் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிப்பதாகவும், ரொம்ப நாட்களாக தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த நிலையில், சென்னையில் படிக்கும் போது தான் எனக்கு படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் நடித்த ஃபேமிலி மேன் வெப் தொடரை பார்த்து விட்டு தான் கௌதம் மேனன் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் படத்தின் என்னுடைய கதாபாத்திரம் மலையாளி என்பதால் மலையாளத்தில் மட்டும் பேசினால் போதும் என கௌதம் கூறினார். படப்பிடிப்பின் போது தான் அவர் படம் என்றாலே அருமையான காதல், அதை அழகாக காட்டக்கூடிய விதம் என்றொரு கற்பனையில் இருந்து மாறியது. அவர் என்னிடம் பேசியபோது இது வழக்கமான கௌதம் வாசுதேவ் மேனனின் படம் இல்லை என தெரிந்தது. காட்சிகள் எதார்த்தமாக அமைக்கப்பட்ட நிலையில் படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை நானும், சிம்புவும் பயணிக்கும்படி இருந்ததாக நீரஜ் மாதவ் கூறியுள்ளார்.
இந்த படம் வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக இருந்ததால் மலையாள ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இதுவும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது. அப்போது வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்வில் கமலுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது எழுப்பப்பட்ட கேள்விக்கு, கமலை முதல்முறையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதனை எப்படியும் நழுவ விடக்கூடாது என்பதால் யார் தப்பாக எடுத்தாலும் கவலையில்லை என செல்ஃபி எடுத்ததாக கூறினார்.
அப்போது ஏ.ஆர்.ரகுமானின் படங்களின் பெயரை வைத்து நான் உருவாக்கிய ராப் பாடலை ஆடியோ வெளியீட்டின்போது பாடிக் காட்டினேன். அப்பாடலை மிகவும் ரசித்த அவர் ஒருநாள் உதவியாளர் மூலம் போன் செய்து வரச் சொன்னார். விமானத்தை பிடித்து சென்ற நிலையில் ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் இப்படத்திற்கு ராப் பாடல் வேண்டும் என கேட்டார். நானும் எழுதிக் கொடுத்தேன் என நீரஜ் மாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: PS Box Office Collection: பொன்னியின் செல்வனின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங் கலெக்ஷன்ஸ்..!