Narain On Vikram : வேற மாதிரி இருக்கப்போகுது.. விக்ரம் குறித்து நரேன் சொன்ன சீக்ரெட்..
என்னை விட லோகேஷ் கமல் சாரின் தீவிர ரசிகர். அதனால் அவர் படத்தை ரசித்து ரசித்து செய்கிறார். நிச்சயம் படம் வெறுமாதிரி வரும். படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும்.
இது குறித்து விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நரேன் கூறும் போது, “ கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று விக்ரம் படத்தின் ட்ரெய்லர் ஒன்று வெளியானது. அதை பார்த்த நான் லோகேஷூக்கு போன் செய்து வாழ்த்தினேன். அப்போது அவர் விக்ரம் படத்தில் நானும் இருப்பதாக சொன்னார். சொன்ன உடனே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிறுவயதில் இருந்தே நான் கமல் சாரின் ஃபேன் என்பதால் நான் விக்ரம் படத்தில் கமிட் ஆனது என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.
Happy birthday dear @Dir_Lokesh . With the release of #Vikram worldwide on June 3rd , this sure is a very special year for u ( and me).
— Narain (@itsNarain) March 14, 2022
Along with brother @girishganges . pic.twitter.com/NDnKb9nt7e
என்னை விட லோகேஷ் கமல் சாரின் தீவிர ரசிகர். அதனால் அவர் படத்தை ரசித்து ரசித்து செய்கிறார். நிச்சயம் படம் வெறுமாதிரி வரும். படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும். அவரின் வயதுக்கு ஏற்ற படிதான் விக்ரமின் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் மிகவும் யூத்ஃபுல்லாக தெரிவார். இந்த வயதிலும் அவர் இப்படி இருக்கிறது எங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கிறது. விஜய் சேதுபதியோடு எனக்கு காம்பினேஷன் சீன் இல்லை. ஆனால் ஃபகத் பாசிலோடும், கமலோடும் காம்பினேஷன் சீன் இருக்கிறது.” என்றார்.
மாநகரம் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது அழுத்தமான திரைக்கதை மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து கார்த்தியுடன் கைகோர்த்த லோகேஷ் கைதி படத்தை இயக்கினார். ஆக்ஷன் படமாக உருவாகியிருந்த இந்தப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தே போதே, அவருக்கு விஜய்க்கு கதை சொல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட லோகேஷ் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார்.
கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தனது தனித்துவமான திரைக்கதையால் பல முன்னணி இயக்குநர்களின் பாராட்டைப் பெற்ற லோகேஷூக்கு தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயல்பிலேயே கமலின் ரசிகரான இவர் படத்தை இயக்குவதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
View this post on Instagram
விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு சர்கார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லோகேஷ் படம்
அண்மையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் காட்சிகளும், ஜூன் 3-ஆம் தேதி படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில் இந்தப்படம் பற்றி பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், “ விக்ரம் படம் 100 சதவீதம் என்னுடைய படமாக இருக்கும். திரைப்படத்திற்கு டீசர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என அனைத்தும் இருக்கும்.” என்று பேசியிருக்கிறார்.