Muthukaalai On Vadivelu | "வடிவேலு கட்டிங் அடிக்ட்..எனக்கு இதுதான் வருத்தம்!" : சீக்ரெட் உடைத்த நடிகர் முத்துக்காளை!
”மாயி படம் சமயத்தில், இரண்டு காமெடி நடிகர்கள் வளர்ந்து வருவதைக்கண்டு இன்னும் உழைக்கணுமோ என அழுதார்.”
வடிவேலு காமெடி என்றால் யாருக்குதான் பிடிக்காது. என்னதான் வடிவேலு சோலா பர்ஃபாமராக இருந்தாலும் , சில நடிகர்களுடன் அவர் சேர்ந்து நடிக்கும் காம்போ காமெடிகள் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமையும் . அப்படித்தான் நடிகர் முத்துக்காளையுடன் வடிவேலு செய்த அனைத்து காமெடியும் ரசிக்கும் படியாக இருக்கும். முத்துக்காளை மதுரை மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர். தனது 18 வய்திலேயே கராத்தே சண்டைப்பயிற்சியில் பிளாக் பெல்ட் பெற்றவர். முதலில் ஸ்டெண்ட் நடிகராகத்தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு வடிவேலுவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக காமெடியனாக தன்னை தகவமைத்துக்கொண்டார்.
வடிவேலு சினிமாவில் நடிக்க இருந்த தடை, அவரை மட்டுமல்ல அவரை சார்ந்து இருந்த சில நடிகர்களையும் பாதிப்படையத்தான் செய்திருக்கும் . இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் வடிவேலு ஏன் நடிக்கவில்லை, என்ன பிரச்சனை என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
”ஒவ்வொருத்தர் ஒவ்வொரு காரணம் சொல்லுறாங்க. சிலர் கேப்டன் கூட ஆன பிரச்சனைதான்னு சொல்லுவாங்க, சில ரெட் கார்ட் பிரச்சனைனு சொல்லுறாங்க. என்னை பொருத்தவரையில் எவ்வளவும் சின்ஸியராக இருந்தாலும் இதுபோன்ற இடர்ப்பாடுகள் வரத்தான் செய்யும். என் காமெடி போலத்தான். நான் பாட்டுக்கும் சிவனேனுதானடா போயிட்டுருந்தேன்..அவரு ரூட்ல போயிட்டு இருந்தாரு, சில பிரச்சனைகள் உள்ள வந்துடுச்சு. அதனால 10 வருடங்களா காமெடிக்கு சரியான தீனி கிடைக்கல. நாம எதிரியோட சண்டை போட்டால்தானே நமக்கு பலம் . அவரு மிகப்பெரிய வீரன். அவரோட நடிக்கிறதால நாமலும் வீரனாகிறோம். அவரு நல்ல ஜாலியான மனிதர் சில சூழ்நிலைகளால அப்படி இருக்காங்க. வடிவேலு கூட இருக்கவங்க முன்னேற விடமாட்டாருனு சொல்லுவாங்க ஆனால் அப்படியெல்லாம் இல்லை. அவரு கூட 10 பேர் இருக்காங்க. அதுல யாருக்கு வாய்ப்புகளை கொடுக்குறதுன்னு குழப்பம் வரும்.
எல்லோருக்கும் ஒரே சம்பளம் என்பதுதான் கொஞ்சம் சிரமமான விஷயம் . ஷூட்டிங் இருக்கு என கூப்பிடுவார் , ஆனால் நடித்த நாட்களுக்கு மட்டும்தான் சம்பளம் வரும். அவர் கொஞ்சம் பரிந்துரை செய்து மற்ற நாட்களுக்கும் சம்பளம் கொடுக்க செய்திருக்கலாம், அவர் சொன்னால் நிச்சயம் செய்வார்கள் . கொஞ்சம் முயற்சி செய்து அவர்களை முன்னேற்றியிருக்கலாம். அதுதான் எனக்கு வருத்தம். மாயி படம் சமயத்தில் இரண்டு காமெடி நடிகர்கள் வளர்ந்து வருவதை கண்டு இன்னும் உழைக்கணுமோ என அழுதார்.
வடிவேலு கட்டிங்கிற்கு அடிக்ட் . கட்டிங் என்பது உழைப்பு அதற்கேற்ற ஊதியம்தான். அதாவது சம்பளத்தில் அவர் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருப்பார். நான் சரக்கிற்கு அடிக்ட். சில சமயங்களில் குடித்திருந்தாலும் வடிவேலு கூப்பிட்டு நடிக்க சொல்லுவார் . அப்படியாக நடித்த காமெடிகளை பார்த்து , பின்னுறான்ல முத்துக்காளை என கூறியிருக்கிறார் “ என வடிவேலு குறித்தும் அவர் குறித்து அறியாத பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் முத்துக்காளை.